பண்பகம் அறக்கட்டளை பசுமை தமிழ்நாடு திட்டம் 2021
ராமநாதபுரம் ஏப்-21
பண்பகம் அறக்கட்டளை பசுமை தமிழ்நாடு திட்டம் 2021 பிரச்சார இயக்கத்தில் சார்பாக மரம் நடுதலின் அவசியம் பற்றி விழிப்புணர்வு பிரசுரம், உள்அரங்கு விளக்க கூட்டம் சமூக வலைதளம் வாயிலாக பிரச்சாரம், தனிநபர் சந்திப்பு பிரச்சாரம், என அனைத்து வகையிலும் பல வருடங்களாக பண்பகம் அறக்கட்டளை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அதில் ஒரு பகுதியாக முதுகுளத்தூர் தொகுதியில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுப்புறச்சூழல் பாதுகாவலர்களை ஒருங்கினைந்து அந்த பகுதி ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மரம் நடும் பணியினை செய்ய ஆர்வமூட்டும் வகையில் பண்பகம் அறக்கட்டளை மரக்கன்றுகளை வழங்கி வருகிறது. முதல் கட்டமாக கடந்த மாதம் ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் அவர்களிடம் 150 மரக்கன்றுகளை பண்பகம் நிர்வாகிகள் வழங்கினார்கள்,
இரண்டாம் கட்டமாக ஏர்வாடிதர்ஹாவில் பசுமை ஏர்வாடி எனும் முயற்ச்சியில் EECT
யின் நிர்வாகிகள் பலவருடங்களாக மரங்களை நிறுவி பராமரித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களின் இந்த செயல்திட்டத்தை ஊக்கப்படுத்தும் விதமாக பண்பகம் அறக்கட்டளை சார்பாக சுமார் #200மரக்கன்றுகளை அறக்கட்டளையின் தலைவர் MS.முஹம்மது இஸ்ஹாக், மற்றும் பொருளாளர் சுபைர்ஆப்தீன் அவர்களும் அரசு தோட்டக்கலை பண்ணைக்கே சென்று EECT யின் நிர்வாகிகள் வசம் ஒப்படைத்தனர்.
இதே போன்று அடுத்தடுத்த கட்டங்களாக கடலாடி ஒன்றியம், கமுதி ஒன்றியம், முதுகுளத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் மரக்கன்று வளர்க்க ஆர்வமுள்ள இளைஞர்கள் மரக்கன்று தேவையென்றால் #பண்பகம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும் எத்தனை மரங்கள் தேவையென்றாலும், எந்த வகையான மரங்கள் தேவையென்றாலும் உங்கள் கிராமத்திற்க்கே கொண்டு வந்து தர பண்பகம் நிர்வாகிகள் ஆர்வமாக உள்ளார்கள்.
இளைஞர்களே ஒருங்கினைவோம் செயல்படுவோம் பசுமை முதுகுளத்தூர் பகுதியாக மாற்றுவோம்! நாளைய நமது தலைமுறை சுவாசக்காற்றை சுகாதாரமாக சுவாசிக்க பாடுபடுவோம்!
மரம் நடுவோம்! மழைபெறுவோம்! மனிதம் காப்போம்! கைகோர்ப்போம்!
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி. ஒலிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு
