குறைகிறது கொரோனா 20,000 கீழே சென்ற பாதிப்பு.. தமிழ்நாட்டில் இன்று 19448 பேருக்கு .. 351 பேர் பலி*

குறைகிறது கொரோனா  20,000 கீழே சென்ற பாதிப்பு.. தமிழ்நாட்டில் இன்று 19448 பேருக்கு .. 351 பேர் பலி*


தமிழ்நாட்டில் இன்று 19448 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் வேகமாக சரிய தொடங்கி உள்ளது. தீவிர லாக்டவுன் காரணமாக கேஸ்கள் வேகமாக குறைந்து வருகின்றன. கடந்த 14 நாட்களுக்கு முன் தினசரி கேஸ்கள் 35 க்கும் அதிகமாக பதிவாகிக்கொண்டு இருந்தது

 இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. தினசரி பலி எண்ணிக்கையும் 400க்கும் கீழ் குறைந்துள்ளது.எண்ணிக்கைதமிழ்நாட்டில் இன்று 19448 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 351 பேர் பலியாகி உள்ளனர்.

.தமிழ்நாட்டில் இதுவரை 27356 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 2256681 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

.குணமடைந்தவர்கள் எண்ணிக்கைதமிழ்நாட்டில் இன்று 31360 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 1997299 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 232026 ஆக உயர்ந்துள்ளது.

.தமிழ்நாட்டில் இன்று 170838 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 160385 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 28189065 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது

.சென்னையில் இன்று 1530 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 19184 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். தமிழகத்தில் கோவையில் நிலைமை சரியாகி வருகிறது. கோவையில் 2654 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது.

 29268 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 1646 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 14712 பேர் செங்கல்பட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.