15 வயது சிறுமிக்கு திருமணம் செய்வதாக புகார்!
ஜுன் 18
அரக்கோணம் கிராமத்தில் 15வயது சிறுமியை தாயார் , தனது உறவினர் மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார். இதுகுறித்து, சைல்டு லைன் அமைப்புக்கு புகார் வந்ததையடுத்து, அதிகாரிகள் சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியை விசாரித்தபோது, திருமணத்திற்கு மறுத்ததால் தாயார் சிறுமியை தாக்கியுள்ளார் என்று கூறினார்
தாயாரிடம் விசாரித்தபோது எனது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்ய வில்லை என்றும், சமீபத்தில் எனது கணவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தார். 18வயது பூர்த்தி அடையாத பெண்ணிற்கு திருமணம் செய்வது குற்றம் என்று அதிகாரிகள் நேற்று சிறுமியை ராணிப்பேட்டை குழந்தைகள் நல குழும கமிட்டியில் ஒப்படைத்தனர்.
மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்..
