எஸ்டிபிஐ கட்சியின் 13ஆம் ஆண்டு துவக்க தின விழா
எஸ்டிபிஐ கட்சியின் 13ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு கல்வெட்டு திறப்பு மற்றும் கொடியேற்று விழா லைன் மேடு பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தெற்கு தொகுதி செயலாளர் ஆரிப்புல்லா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா கலந்துகொண்டு கல்வெட்டை திறந்து வைத்து கொடியேற்றி சிறப்பித்தார். மேலும் பொதுமக்கள் 150க்கும் மேற்பட்டோருக்கு அரிசி வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் தலைவர் அப்சர் அலி, பொது செயலாளர் சையது அலி, பொருளாளர் முபாரக், மாவட்ட செயலாளர் பிலால், துணை தலைவர் தர்வேஷ் மைதீன் இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அரிசி வழங்கி உதவினார்கள்.
