அரசு ஊழியர் மிரட்டல்; மனைவியுடன் சேர்ந்து வாழ 100பவுன் கொடுங்க!!!!

அரசு ஊழியர் மிரட்டல்; மனைவியுடன் சேர்ந்து வாழ 100பவுன் கொடுங்க!!!!

மனைவியுடன் சேர்ந்து வாழ 100பவுன் கொடுங்க - அரசு ஊழியர் மிரட்டல்ராணிப்பேட்டையில் மனைவியுடன் சேர்ந்து வாழ 100 பவுன் நகை வரதட்சணை கேட்டு, கொலை மிரட்டல் விடுத்த அரசு ஊழியர் உள்ளிட்ட 5 பேர்மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்

ராணிப்பேட்டை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஹாஜிரா (27). செவிலியராகப் பணியாற்றுகிறார். இவர்  ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, நான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வருகிறேன். சென்னையில் படிக்கும்போது அரசு ஊழியராக வேலை பார்க்கும் கண்ணன் என்பவரை காதலித்து, 2019-ஆம் ஆண்டு கண்ணன், ரத்தினகிரி கோவிலில் வைத்து என்னை தி்ருமணம் செய்துகொண்டார் இப்போது சேர்ந்து வாழ, கண்ணன், மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பட்டம்மாள், நரசிம்மன், பாஸ்கர் உள்ளிட்ட 5பேர் என்னிடம் 100 பவுன் நகை, வீடு வாங்க பணம், கார் உள்ளிட்டவைகளை கேட்டுக் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார் அதன்பேரில் ராணிப்பேட்டை மகளிர் போலீசார் இதுகுறித்து 5 பேர்மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...