Corona மரணங்களை மறைக்க பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் பெரிதாகப் படுகிறதா.....?
PSBB மாதிரி தான் எங்க பள்ளியும் என 96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்த கெளரி கிஷன் பகீர் கிளப்பி உள்ளார்.
ஒரு பிரச்சனை பூதாகரம் எடுக்கிறது என்றால் அதனைச் சுற்றி பல்வேறு பிரச்சனைகள் கிணறு தோண்ட பூதம் கிளம்பியது போல் பல்வேறு புகார்கள் வந்துக் கொண்டே இருக்கும்.
அப்படித்தான் இப்போது பல்வேறு புயல்களை பொய் புரட்டுகளை கிளப்பிக் கொண்டு உள்ளனர்.
பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாக 30க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக ராஜகோபாலனை விசாரித்த போலீசார், அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்
பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியை போலவே ஏகப்பட்ட தனியார் பள்ளிகளில் இது போன்ற பாலியல் ரீதியான தொல்லைகள் மாணவிகளுக்கு தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருவதாக ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் தற்போது ஒவ்வொரு பூதமாக சமூக வலைதளங்களில் கிளம்பி வருகின்றன.
தங்கள் குழந்தைகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் மூலமாக இதுபோன்ற பாலியல் தொல்லைகள், இழிவுபடுத்தும் செயல்கள், சாதிய ரீதியான வன்கொடுமைகள் உள்ளிட்ட தவறுகள் நடைபெறும் போது, குழந்தைகளின் பேச்சைக் கேட்காமல் பெரிய பள்ளியில் படிக்கும் வாய்ப்பு பறிபோய் விடும் என பயந்து பெற்றோர்கள் அமைதி காத்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
PSBB பள்ளி மாதிரி தான் எங்க ஸ்கூல்லும், அது போன்ற பிரச்சனைகளை நானும் எதிர்கொண்டேன், என்னை போலவே என்னுடன் படித்த மாணவிகளும் அனுபவித்துள்ளனர் என '96 ' படத்தில் குட்டி ஜானுவாக நடித்த நடிகை கெளரி கிஷன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள போஸ்ட் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.
இதுதொடர்பாக நீண்ட பதிவை இட்டுள்ள நடிகை கெளரி கிஷன், தன்னுடன் படித்த மற்ற மாணவிகள் மற்றும் அந்த பள்ளியில் படித்த மாணவ மாணவிகளிடமும் இதுதொடர்பாக விசாரித்த பின்னரே இந்த பதிவை பதிவு செய்துள்ளதாகவும், மேலும், தற்போது படிக்கும் மாணவிகள் இது போன்ற பிரச்சனைகளை அனுபவித்தால் தயங்காமல் தெரிவிக்கவும், உங்களின் பெயர்களை வெளியே சொல்லாமல் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வழி செய்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
இது போன்ற பிரச்சனைகள் தனியார் பள்ளிகளில் மட்டுமல்ல அரசு பள்ளிகளிலும் கடந்த காலங்களில் நிறையவே நடைபெற்று உள்ளது. இதில் நிறைய அரசு பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இடம் தர்ம அடி வாங்கி உள்ளனர். அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது அது எல்லாம் இப்போது என்னவானது என்று தெரியவில்லை.
இதில் பல விவகாரங்கள் வெளியே வரவில்லை கட்சி, ஜாதி, அதிகார பலம், அரசியல் செல்வாக்கு என்று பல விஷயங்கள் அமுக்க பட்டுள்ளது.
இப்போது இந்த பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் மட்டும் பெரிதாக படுவதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் உள்ளது. அதுமட்டுமல்ல தினந்தோறும் Corona வல் நூற்றுக்கணக்கான மக்கள் துடிதுடித்து இறந்து வருகின்றனர்.
இந்த பிரச்சினையில் இருந்து மக்களை திசை திருப்புவதற்கான நாடகம் இது என்று குறிப்பிடுகின்றனர்.
