மாணவர் சேர்க்கையும், கல்வி கட்டணமும்; பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு!

மாணவர் சேர்க்கையும், கல்வி கட்டணமும்; பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு!



தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பிற்கு மட்டும் சில வாரங்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டது. ஆனால் வைரஸ் பாதிப்பு தீவிரமடைவதை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன..


இந்த சூழலில் கடந்த ஆண்டு முறையாக பள்ளிகளை நடத்தாமல் ஆன்-லைன் வகுப்புகளை கூட சரிவர நடத்தாமல் கோடிக்கணக்கில் கொள்ளையடித்த பள்ளிகள்தான் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு துடியாய்த் துடிக்கிறது. 

அந்த கொள்ளைக் கூட்டம் தான் இந்த
 2021-22ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை கடந்த மார்ச் மாதம் முதலே தொடங்கி நடத்தி வருகின்றனர்

கொரோனாவைரஸின் இரண்டாவது அலை விரைவில் உச்சம் தொடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த சூழலில் தற்போதைய ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று யாருக்குமே தெரியாது.

எனவே தற்போது மாணவர்கள் சேர்க்கையை நடத்தக் கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசுஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. 

ஆனால் விரைவாக மாணவர்கள் சேர்க்கையை முடித்துவிட இந்த கொள்ளைக்கார பள்ளி நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக பெற்றோர்களை நேரில் வரவழைத்து மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளன.

இந்நிலையில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி கட்டணம் செலுத்துதல் போன்ற காரணங்களுக்காக பெற்றோர்களை நேரில் வரவழைத்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறைஎச்சரித்துள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஊரடங்கு காலத்தில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள மட்டுமே தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் வசூல் என புகார்கள் வந்துள்ளன. இவ்வாறு செய்தால் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் சேர்க்கை, கல்வி கட்டண வசூல் போன்ற பணிகளை ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளலாம். தற்போது கோவிட்-19 பரவல் அதிகமிருப்பதால் தமிழக அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனாலும் அவர்கள் தங்கள் கொள்கையை விடுவதாக தெரியவில்லை. இதை சரிகட்ட தான் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்து வருகின்றனர் என்கிற பேச்சு பரவலாக எழுந்துள்ளது.

ஒரு பக்கத்தில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், ஓயாமல் உழைத்த ஆசிரியர்களுக்கு ஒழுங்காக சம்பளம் கொடுக்க முடியாமல் 15 மாதங்களாக பள்ளியை மூடிவிட்டு பரிதவிக்கின்ற ஆயிரக்கணக்கான பள்ளி தாளாளர்கள்.

இன்னொரு பக்கம் கொள்ளையடித்து கொழுத்துக் கொண்டிருக்கின்ற பண வெறி பிடித்து முதலைகள்.

மாவட்ட அளவில் மாநில அளவில் யாரோ ஒரு சிலர் செய்கின்ற தவறுக்கு பலியாவது என்னவோ ஒரு தவறும் செய்யாத சாதாரண நடுத்தர பள்ளிகள் மட்டும் தான்.

இந்த பள்ளி தவறு செய்கிறது என்று பெற்றோர்கள் பொதுமக்கள் புகார் கொடுக்கின்ற சமயத்தில் அந்த பள்ளிகள் மீது மற்றும் நடவடிக்கை எடுத்தால் போதும். அந்த கொள்ளைக்கார கோடீஸ்வரர்கள் யார் என்பது அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும் . எனவே  இந்த எச்சரிக்கையை அவர்களுக்கு மட்டும் செய்தால் போதும். ஆனால் அரசு அதை விட்டுவிட்டு பொத்தம் பொதுவாக அறிக்கை விடுவதால் ஒட்டுமொத்த பள்ளிகளும் பாதிக்கப்படுகிறது.  அதனால் ஒட்டுமொத்த தனியார் பள்ளிகளும் கொள்ளை கூடாரங்களாக சித்தரிக்கப்படுவது வேதனைக்குரிய விஷயம். அரசு இனியாவது இந்த விஷயத்தில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்பதே உண்மையான கல்வி சேவையாற்றும் தனியார் பள்ளிகளின் கோரிக்கை.

இந்த அரசு யார் பக்கம் நிற்க போகின்றது.....?