சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு கண்காணிக்க தனி குழு
சேலம் வடக்கு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதி முழுவதும் கொரோனா முழு ஊரடங்கினை அமல்படுத்தி கண்காணிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சேலம் வடக்கு ஆர்டிஓ திரு சரவணன் அவர்கள் தலைமையில் 15 மண்டலங்களாக பிடிக்கப்பட்டு ஒவ்வொரு டிவிஷன் க்கும் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவானது பகுதியில் கடைகள் முழுமையாக மூடப்பட்டனவா தேவையில்லாமல் மக்கள் நடமாட்டம் காய்கறி வண்டிகளின் பணிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டோருக்கு மருத்துவ உதவிகள் உணவுப் பொருட்கள் முறையாக கிடைக்கின்றனவா என அந்தந்த முன் களப்பணியாளர்கள் மூலம் செய்துகண்காணிக்கவும் அந்தந்த பகுதியில் பாதிக்கப்பட்ட ஒரு விவரங்கள் மருத்துவமனையில் சேர்ந்தவர் விவரங்கள் இறந்தவர் விவரங்கள் சேகரிப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தரவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது இப்பணிகளில் சேலம் முதன்மை கல்வி அலுவலர் திரு கணேஷ் மூர்த்தி அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் பிரபாகரன் அவர்கள் தலைமையில் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்

