தூத்துக்குடி அரசு மருத்துவ மனையின் அவலநிலையை பாரீர்....!! கனிமொழிக்கும் கீதா ஜீவனுக்கும் போன் செய்தும் ஒரு புண்ணியமும் இல்லை.... தூத்துக்குடி திமுக தொண்டனின் மனவேதனை!

தூத்துக்குடி  அரசு மருத்துவ மனையின் அவலநிலையை பாரீர்....!! கனிமொழிக்கும் கீதா ஜீவனுக்கும் போன் செய்தும் ஒரு புண்ணியமும் இல்லை.... தூத்துக்குடி திமுக தொண்டனின் மனவேதனை! 



நேற்று,காலை,19.05.2021.அன்று காலை எனது 7.மணியளவில் எனது அண்ணன்  மகள் உடல் சாரியில்லாத நிலையில்  தூத்துக்குடி  அரசு மருத்துவமனையில் சேர்த்தோம் அவர்கள்  skinward.ல் வைத்து  வந்தவுடன் நர்ஸ் ஊசிபோட்டார்கள் அனுமதித்த நேரத்தில்  இருந்த காலை 7,மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஒரு மருத்துவர் கூட வந்து  பார்க்கவில்லை  நான்உடனே நம்முடைய அமைச்சர் கீதாஜீவன் அவர்களை போனில் தொடர்பு கொண்டு  நிலைமையை சொன்னேன் அவர்கள்  ஆவண செய்வதாக சொன்னார்கள்  நம் எம்.பி.கனிமொழி அவர்களின் BA அவர்களை தொடர்பு கொண்டு  உதவிகோரினேன் அவர்களும் உதவி செய்வதாக சொன்னார்கள்  ஆனால்  யார்உதவியும் எடுபடவில்லை 

 மாலை 6 மணி வரை எந்த மருத்துவரும் வந்து பார்த்து சிகிச்சை அளிக்கவில்லை அதனால்  என் அன்பு மகள் எங்களை விட்டு மாலை 6 அளவில் பிரிந்து விட்டாள் அவளுக்கு  4 சிறுபெண் குழந்தைகள் இருக்கிறார்கள் ..கொரனா நேரத்தில்  அரசாங்கம் வேகமாக  செயல்படுவதாக இருந்தாலும்  தூத்துக்குடி அரசாங்க மருத்துமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை  உயிர்கள்  பலியாகபோகிறதோ தெரியவில்லை  காலையில் மருத்துவமனைக்கு நடந்து  வந்தவள் மாலையில் உயிருடன்   இல்லை ,

இந்தஅரசு அமையவோண்டும் என்று அயராது உழைத்த என்னை போன்றவர்களுக்கு மிகுந்த  வேதனையாக இருந்தது  நேற்றைய  மருத்துவர்களுடைய செயல்பாடு. அரசாங்கம் கவனிக்குமா ஏழைமக்களுக்கு இரங்குமா...?

பி,ஜெயராஜ்.செயலாளர்  தமிழகமாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு  சங்கம்  9789497542