கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்காக கே. வி. எஸ். நிறுவனத்தின் சார்பாக கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்காக, நோய் பரவலை தடுக்கும் வகையில்
கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சப்பாணிப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் *##KVS* குழுமம் சார்பில்
கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள், மின்வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன்
இயற்கை சூழல்நிலையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு என்னுடைய சகோதாரர் திரு.கே.எம்.சுப்பிரமணி அவர்களது *ஆஹா உயர்தர சைவ உணவகம்* மூலம் 3 வேளையும் தரமான உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான பொருட்களை *சுவாமி சூப்பர் மார்க்கெட்* நிறுவனத்தின் இயக்குனர் சகோதாரர் திரு.கே.எம்.சுவாமிநாதன் வழங்குகிறார்.
மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தடையின்றி மின்சாரம் வழங்க தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று தயார் நிலையில் உள்ளது.
மக்களுக்கு உதவி செய்ய வாய்ப்பு வழங்கிய மாண்புமிகு. திரு. *தமிழக முதல்வர் திரு.மு.க.#ஸ்டாலின்* அவர்களுக்கும்,
மாவட்ட கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்கும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.#காந்தி அவர்களுக்கும்,
கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான டி.செங்குட்டுவன் அவர்களுக்கும்,
கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் அவர்களுக்கும்,
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செல்லக்குமார் அவர்களுக்கும்,
சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும்
கல்லூரியை வழங்கி உதவிய உரிமையாளருக்கும்,
சிறப்பு சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த மருத்துவக்குழுவினர், தொய்வின்றி பணிகள் செய்த எங்கள் நிறுவன ஊழியர்களுக்கும்,
தன்னார்வலர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் உள்ளிட்ட அனைவருக்கும்
மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறப்பு மையத்தில் சிகிச்சை பெறும் அனைவருக்கும் தரமான சிகிச்சை கிடைத்து நலமுடன் வாழ வேண்டும்.
*இறைவன் அருள் புரிய வேண்டும்.*
என்றும் மக்கள் பணியில்
KVS.சீனிவாசன்,
நிர்வாக இயக்குனர்
Number one foods
KVS Groups
