கொரோனா உடையில் அசத்திய ஸ்டாலின் நோ..! .நேரடியாக சந்தித்தார்....!!
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்தபடி முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் கோவை உள்ளிட்ட சில கொங்கு மாவட்டங்களில் மட்டும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் குறைந்த நிலையில், கோவையில் கேஸ்கள் இன்னும் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்படவில்லை.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் ஸ்டாலின் கண்காணித்தார். கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் எப்படி நடக்கின்றன, லாக்டவுன் கட்டுப்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று நேரடியாக ஆய்வு செய்தார்.

