விபச்சாரத்தில் தள்ள முயற்சி; காதல் கணவர் மீது மனைவி புகார்!!!!

 விபச்சாரத்தில் தள்ள முயற்சி; காதல் கணவர் மீது மனைவி புகார்!!!!


கணவர் ஸ்ரீநாத்தின் கொடுமைகள் தாங்க முடியாமல், மனைவி ஜபினா பலமறை தற்கொலை முயற்சி செய்துள்ளார் பின்னர், ஸ்ரீநாத்தின் கொடுமைகள் தாங்க முடியாமல் கடந்த 2 ஆண்டுகளாக தனது தாயார் வீட்டில் ஜபினா வசித்து வருகிறார்

காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவன் தன்னை விபச்சாரத்தில் தள்ள முயற்சிப்பதாக  ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார் 

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த வி.சி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஜபினாவுக்கும் பக்கத்து மாநிலமானஆந்திர மாநிலம் சித்தூர் நகரில் வசித்து வரும் ஸ்ரீநாத் என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்களுக்கு முஜம்மது ஷபி,(8)வயது அசேன்(6)வயது என இரு குழந்தைகள் உள்ளனர் இந்நிலையில், திருமணத்துக்கு பின்னர் ஜபினாவை இந்து மதத்துக்கு மாறக்கூறி ஸ்ரீநாத் அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது மேலும்,  மது பழக்கத்துக்கு அடிமையான ஸ்ரீநாத்  ஜபினா மற்றும் குழந்தைகளை அடித்து பட்டினி போட்டு வந்துள்ளார் ஸ்ரீநாத்தின் கொடுமைகள் தாங்க முடியாமல், ஜபினா பலமறை தற்கொலை முயற்சி செய்துள்ளார்.  பின்னர், ஸ்ரீநாத்தின் கொடுமைகள் தாங்க முடியாமல் கடந்த 2 ஆண்டுகளாக 

வி.சி.மோட்டூரில் உள்ளதனது தாயார் வீட்டில் ஜபினா வசித்து வருகிறார் இந்நிலையில், கடந்த 27ம் தேதி வி.சி.மோட்டூரில்  உள்ள ஜபினாவின் தாயார் வீட்டுக்கு வந்த ஸ்ரீநாத்,  மனைவி ஜபினாவையும்  குழந்தைகளையும் தன்னுடன் சித்தூர் செல்ல அழைத்துள்ளார் மனைவி ஜபினா நான் தாங்களுடன் வரமாட்டேன் என கூறியுள்ளார் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது கொலை செய்து விடுவதாக  மிரட்டியுள்ளார் இது தொடர்பாக ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள ஜபினா, தனது கணவர் அடித்து துன்புறுத்துவதுடன் விபசாரத்தில் ஈடுபட கட்டாயப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.  ஸ்ரீநாத் மீது சித்தூர் காவல் நிலையத்தில்  பல்வேறு வழக்குகள்  நிலுவையில் உள்ளதாகவும் ஜபினா தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வாசுகி விசாரணை நடத்தி வருகின்றனர் .

ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..