அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி ராமநாதபுரம் எம்எல்ஏ விடம் கோரிக்கை

அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி ராமநாதபுரம் எம்எல்ஏ விடம் கோரிக்கை


கீழக்கரையில் முத்துச்சாமிபுரத்தில் தொடர்ந்து வாய்க்கால்கள் முறையாக அமைக்காததால் அங்கு சாக்கடை நீர் நிரப்பி வழிகிறது இரண்டு வருட கலாமாக யாரும் வருவதில்லை என்று மக்கள் குற்றம் சொல்லுகிறார்கள். 

இந்த பகுதி மக்களுக்கு நோய் ஏற்படும் சூழல் அதிகமாக உள்ளது கொசுக்கள், கிருமிகள் தண்ணீரில் அதிகமாக காணாப்படுகிறது மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் இங்கு நகராட்சியில் இருந்து யாரும் வருவதில்லை என்றும் , மேலும் வாய்க்கால்கள் பல இடங்களில் மூடி இல்லாமல் திறந்து கிடக்கிறது கால்வாய் வெளியில் அப்படியே அந்த கால்வாய்களில் அள்ளியத்தை போட்டு விட்டு போகிறார்கள்அதை எடுப்பதில்லை. மின் விளக்கு அந்த பகுதியில் எரியவில்லை  மக்கள் சிரமப்படுகிறார்கள். 

கொரானா காலம் என்பதால் நோய் ஒரு பக்கம், இந்த சாக்கடை நீரினாலும் அதிக அளவு நோய் தொற்று ஏற்படும் மக்கள் என்ன செய்வார்கள் போர்கால அடிப்படையில் இதை உடனடியாக  வார்கால் முழுவதும் சரி செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம்.

இன்று ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைகூறிய காதர் பாட்சா என்கின்ற முத்துராமலிங்கம் அவர்களிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாகவும் பொது மக்கள் சார்பாகவும் கோரிக்கை வைத்தோம் கொரானா லாக்டவுன் முடிந்த உடன் இதற்கு உண்டான வேலைகள் நடை பெறும் என்று அண்ணன் சொன்னார்.

இதில் முன்னால் மண்டல அமைப்பாளர் அமீரகம் அசாருதீன் நகர் துணை செயலாளர் ஹபீப் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பாசித் இல்யாஸ்

நகர் செயலாளர்

விடுதலை சிறுத்தைகள் கட்சி

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம்