பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி; டி எஸ் ஆர் சுபாஷ் தலையீட்டால் சமரசம் ஆனது
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் தாலுக்கா மேலமங்கலம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்க சென்ற உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியை சந்தித்து தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் சங்கத்தின் செய்தியாளர்கள் ஒன்று சேர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த செய்தியாளர்களுக்கான ரூ 5ஆயிரம் சிறப்பு ஊக்கதொகை தாலுக்கா நிருபர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தி அமைச்சரிடம் மனு கொடுத்த போது
மனுவை கையில் வாங்காமல் செய்தியாளர்களை பார்த்து *யோவ்* *உங்களால் தான் நோய் தொற்று பரவுகிறது என்றும், கிராமத்தில் உள்ள செய்தியாளர்களுக்கு பணம் கொடுப்பாங்களா? தளபதி சொன்னது தான் போ என்று கூறினார்.
அமைச்சர் பொன்முடிஒருமையில் பேசியதால் சங்கடம் அடைந்த அனைவரும் திகைத்தனர். முதலமைச்சர் பதவி ஏற்றவுடன் பத்திரிக்கையாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்த மு.க.ஸ்டாலின் தற்போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஒருமையில் பேசியதால் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
. விழாவில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர். இவர்கள் மத்தியில் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசிய அமைச்சர் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா என்று பத்திரிகையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்*
கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்களின் பாதுகாவலனாக விளங்கிவரும் பாசத்துக்குரிய அண்ணன் திரு ஆர் கே முருகன் அவர்கள் தலைமையில் தாலுக்கா அளவில் பணிபுரிய நிருபர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகையை அனைவருக்கும் சேர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் மனு கொடுத்தபோது அந்த மனுவினை வாங்காமல் பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசி அவமதிப்பு செய்த அமைச்சரை வன்மையாக கண்டிக்கிறோம். என்று விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட பத்திரிகையாளர்கள் தங்கள் வாட்ஸ் அப் குழுக்களில் இதை பதிவு ஏற்றினார்கள் இந்த செய்தி தமிழகம் முழுவதும் தீயாய் பரவியது.
இந்த செய்தி அறிந்த அமைச்சர் பொன்முடி சம்பந்தப்பட்ட நிருபர்களிடம் சமரசத்திற்கு வந்துள்ளார்.
இது சம்பந்தமாக இன்று மாலை அமைச்சர் வீட்டிற்கு பத்திரிக்கையாளர்களை வருமாறு அவருடைய உதவியாளரிடம் சொல்லி, தொலைபேசியிலும் தெரிவித்தார் !*
*அதன்பேரில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்ணன் மற்றும், செய்தியாளர்களுடன் நிர்வாகிகள் சென்றனர் !*
*அது சமயம், வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டரில் பதிவிட்டதை முன்வைத்தார் அமைச்சர் !*
*"நீங்கள் பேசிய வார்த்தைகள் எங்களால் தாங்க முடியாமல் இருந்தது அதனால் நாங்கள், எங்களுடைய மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்களிடம் தகவல் தெரிவித்தோம், அதன்பேரில் அவர் பதிவிட்டிருந்தார் " என்று நிர்வாகிகள் தெரிவித்தனர் !*
*அதற்கு சிறிது நேரம் பேசப்பட்டு சமரசம் ஏற்பட்டுபிறகு, அமைச்சர் பொன்முடி அவர்களும், மாநில தலைவர் டி .எஸ் .ஆர்.சுபாஷ் அவர்களும் தொலைபேசியில் பேசியதன் மூலம் சமரசம் ஏற்பட்டது !*
*அதன்பேரில் அமைச்சர் இன்னும் ஒரு சில தினங்களுக்குள் சங்க நிர்வாகிகளையும் அழைத்துச் சென்று, மாநில தலைவர் சுபாஷ் அவர்களையும் வரச்சொல்லி முதலமைச்சரிடம் இந்த கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார் !*
*உடனே தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது !*
*தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவணத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தார் !*
*இதைத் தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர் க.பொன்முடி அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் !*
*அவர் உறுதி அளித்ததைத் தொடர்ந்தும், காலையில் நடைபெற்ற சம்பவம் குறித்து விளக்கம் அளித்தது முன்னிட்டு, தோழர்கள் யாரும் அவருக்கு எதிராக எந்த பதிவுகளும் பதிவிட வேண்டாம் என்று தோழமையுன் கேட்டுக் கொள்கிறோம் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

