சசிகலா பேசியதாக வெளிவந்துள்ள ஆடியோ....! அதிமுகவை உடைக்க சதியா...?
நான் நிச்சயம் வருவேன். கட்சியை சரி செய்து கொள்ளலாம்’ என, தன் ஆதரவு தொண்டரிடம், சசிகலா பேசிய ஆடியோ, சமூக வலைதளங்களில், வேகமாக பரவி வருகிறது.
சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலாவுக்கு, அ.ம.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் வந்தால், அ.தி.மு.க., நிர்வாகிகள் அவர் பக்கம் செல்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் செல்லவில்லை. அதைத் தொடர்ந்து, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக, சசிகலா அறிவித்தார். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. தினகரனின் அ.ம.மு.க., படு தோல்வியை சந்தித்தது.
இந்தச் சூழ்நிலையில், சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. அவர், லாரன்ஸ் என்ற தொண்டரிடம், மொபைல் போனில் பேசியது, சமூக வலை தளங்களில், வேகமாக பரவி வருகிறது.
லாரன்சிடம் பேசிய சசிகலா, ‘நல்லா இருக்கிறீர்களா, வீட்டில் எல்லாம் நல்லா இருக்கிறார்களா’ என, நலம் விசாரிக்கிறார். பின்னர், ‘நான் சீக்கிரம் வந்து விடுவேன்; கவலைப்படாதீங்க. கண்டிப்பாக கட்சியை சரி செய்து விடலாம். எல்லாரும் தைரியமாக இருங்க. கொரோனா முடிந்ததும் நான் வந்துவிடுவேன். எல்லாரும் ஜாக்கிரதையாக இருங்க. நிச்சயம் வந்துவிடுவேன்’ என, கூறுகிறார்.
.இந்த ஆடியோ, எந்த அளவிற்கு உண்மை தன்மை வாய்ந்தது என்று ஆராயப்பட்டு வருகிறது இதை கேட்ட பல இது சசிகலாவின் வாய்ப்பே இல்லை என்கின்றனர்.
லாரன்ஸ் என்பவர் யார் அவர் எந்த ஊர் எந்த மாவட்டம் கட்சியில் என்ன பொறுப்பில் இருக்கிறார் என்கிற எந்த விவரமும் இல்லாமல் பதியப்பட்டுள்ள இந்த ஆடியோ பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.
இது அதிமுகவிற்குள்குழப்பத்தை ஏற்படுத்தி கட்சியை பிளவுபடுத்தநடைபெறும் சதி என்று பலரும் கருதுகின்றனர்.
