தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை முதல்வர் பாதுகாப்பாரா...?
தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம்பாதுகாத்து வாழ்வாதார நிதி வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு அவர்கள் கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளனர் அதில்
மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்களுக்கு,... வணக்கம். தமிழகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் 10 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இப்பள்ளிகளில் பயில்வதற்காக கிராமம் முதல் நகரம் வரை பட்டி தொட்டி எங்கும் வீடு வீடாகச் சென்று பிள்ளைகளை அழைத்து வந்து தரமான கல்வி பெறுவதற்காக 50,000 பள்ளி வாகனங்கள் இயங்குகின்றன. பள்ளி வாகனங்களுக்கான 50,000 ஓட்டுநர்கள் நடத்துநர்கள் பணியாற்றி வருகிறார்கள். தனியார் பள்ளி வாகனங்கள் சாலை வரி,,இருக்கை வரி, இன்சூரன்ஸ்,எப்.சி, செய்யவும் நாள்தோறும்டீசல், பெட்ரோல் போடுவதிலும் கோடிக்கணக்கான ரூபாய்களை மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு வகை வரிகளாக செலுத்தி வருகின்றோம்.
பள்ளி வாகனங்கள் பராமரிக்க டிங்கரிங் பெயிண்டிங் மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல் என்று கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வாழ்வு வளம் பெற்று வருகிறார்கள்.
தமிழக அரசின் சமச்சீர் பாடப்புத்தகங்களை நோட்டு புத்தகங்களை வாங்கி அரசின்பெரும் பணச்சுமையையும் பணிச்சுமையையும் குறைத்து அரசுக்கு சேவை வரி, ஜி எஸ் டி, டி என் எஸ் சி வரி, சொத்து வரி,கட்டிட வரி,நிலவரி,நீர் வரி, மின்சார கட்டணம்,பிராவிடண்ட் ஃபண்ட், இ எஸ் ஐ, அங்கீகார கட்டணம்,ஆய்வு கட்டணம், என பல கோடிக்கணக்கான ரூபாய்களை வரியாக கட்டியும், ஒவ்வொரு பள்ளியும் பல லட்சக்கணக்கான ரூபாய்களை அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகையாக பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சேமித்து வைத்துள்ளோம்.
மத்திய மாநில அரசுகளின் நிதி ஆதாரத்தை பெருக்கி,அரசின் பெரும் பணச்சுமையை குறைத்து, லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பைதந்து , தரமான கல்வியை தமிழகத்தில் அனைவருக்கும் தனியார் பள்ளிகள் தந்து வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது..
இப்படிப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் உள்ளக்குமுறலை வேண்டுகோளாக தமிழக முதல்வர் அவர்களின் கனிவான பார்வைக்கு பதிவு செய்கின்றோம்.
ஐயா, நாங்கள் கடந்த 15 மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம்.
'கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்றார் ஔவையார்.
ஆனால் தற்போது தனியார் பள்ளி ஆசிரியர்கள் எவ்வளவு படித்திருந்தாலும் வேறு வேலையோ ஊதியமோ இன்றி வறுமையில் தவித்து வருகின்றோம்.
இதே நிலை நீடித்தால் எங்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும். எங்களில் பலர் வேறு வழி தெரியாமல் தற்கொலை செய்து கொண்ட வரலாறுகள் ஏராளம்.
15 மாதங்களாக பள்ளிகள் திறக்க வில்லை. பாடம் நடத்த முடியவில்லை. தற்போதைக்கு பள்ளிகள் திறக்கும் என்ற எண்ணம் இல்லை. பெற்றோர்கள் கல்வி கட்டணம் செலுத்த மறுக்கிறார்கள். பள்ளி நிர்வாகிகள் வாங்கிய கடனுக்கு வட்டியும், தவணையும் கட்ட முடியாமல் தத்தளித்து வருகிறார்கள்.
அது மட்டுமல்லஎதிர்கால இந்தியாவின் தூண்களாகிய மாணவர்களுக்கு கல்வியின் மேல் உள்ள பற்று குறைந்து விடும். காரணம் ஆசிரியர்கள் புத்தகத்தை மட்டுமே போதிப்பது இல்லை அதனுடன் வாழ்க்கையையும் தான் சேர்த்து போதிக்கின்றனர்.
தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களாகிய நாங்கள்எந்த விதத்தில் குறைந்து விட்டோம்???
நம் நாட்டின் கல்வி தரத்தை உயர்த்த அயராது பாடுபட வில்லையா????
மாணவர்கள் பாஸ் ஆனால் மட்டுமே போதாது , நல்ல மதிப்பெண்கள்பெற்று மருத்துவர் , மாவட்ட ஆட்சியர், பொறியாளர், பட்டய கணக்காளர்போன்ற பல உயரிய பதவிகளை அடையவேண்டும் என்று நாங்கள் அவர்களுக்காகஉழைக்க வில்லையா?
நாட்டின் கல்வி தரம் உயர தனியார்பள்ளிகளின் பங்களிப்பு ஏராளம்.ஆனால் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின்வாழ்வாதாரம் - ??????
தயவு கூர்ந்து அரசு எங்களைப் பற்றியும் சற்று சிந்திக்க வேண்டும்.
கற்றறிந்த ஆசிரியர்களின் சாக்பீஸ் பிடித்த கரங்கள்,.....
இன்று தினக்கூலிகளாக கட்டுமானப் பணியில்கல் சுமந்தும், மண்சுமந்தும் காரை கரண்டி பிடித்தும், மளிகை கடையில் பொட்டலம் கட்டியும்,துணி வியாபாரம்டீ கடை போண்டா வடை கடை என்று கிடைக்கும் வேலைகள் செய்தும்தங்களது மனைவி, குழந்தைகளின் பட்டினியைப் போக்கப் போராடுகிறார்கள்.
கணவனை இழந்த பெண் ஆசிரியர்கள் செய்வதறியாதுவேதனையில் உள்ளனர்.
ஏன் அரசு இதை எல்லாம் நினைக்காமல் உள்ளது???
ஏன் எவரும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம்
பற்றி நினைப்பது இல்லை????
அரசாங்க ஆசிரியர்களுடன் ஒப்பிடும் பொழுது எங்கள் வருமானம் மிகவும் சொற்பம்.
அரசுப்பள்ளிகளுடன் ஒப்பிடும் போது மாணவர்கள் அதிகமாக நாங்கள் படிக்க வைக்க வில்லையா??
எங்களால் மாணவர்கள் பல துறைகளில் சாதிக்க வில்லையா????
ஏன் இந்த வேறுபாடு???
கடந்த ஒரு வருடகாலமாக வேலை இன்றி தவிக்கும் எங்களை மாண்புமிகு தளபதியின் தமிழக அரசு சற்றே
திரும்பிப் பார்க்க வேண்டும் என்று பணிவோடு வேண்டு கிறோம்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது அக்கறை கொள்ளும் அரசு,
தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீதும் அக்கறை கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறோம்.
நாங்களும் இந்நாட்டின் குடிமக்கள் தானே?
கடந்த ஓர் ஆண்டு காலமாக அழுது புலம்பிவிட்டோம்.
கடந்த ஆட்சியாளர்களால் எங்களுக்கு
பலன் ஏதும் இல்லை. தமிழக தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என நாங்கள் அனைவரும் அன்றும் இன்றும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தொடர்ந்துஆதரவாக இருந்து வருகின்றோம்.
எங்கள் தளபதியின்நல் ஆட்சியிலாவது எங்கள் புலம்பலுக்கு விடிவு கிடைக்கும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என நம்புகிறோம்.
* தெலுங்கானா அரசு தெலுங்கானாவில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 2500 வாழ்வாதார நிதியும் மாதம் 25 கிலோ அரிசியும் தருவது போல் தமிழகத்திலும் தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் அனைவருக்கும் மேற்கண்ட வாழ்வாதார நிதியை தந்து உதவ வேண்டுமாய் அன்போடு வேண்டுகின்றோம்.
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின்தல கர்த்தாவாக வந்துள்ள திருமிகு. உதயச்சந்திரன் I. A. S. அவர்களால் எங்கள் வாழ்விலும்உதய சூரியன் உதிக்கும் தமிழகத்தின் தலைமை செயலாளர். திருமிகு. இறையன்பு. I.A.S. அவர்களின்
இறைஅன்பும் தனியார் பள்ளிகளுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இக் கோரிக்கை மனுவினை
தங்கள் மேலான பார்வைக்கு பணிந்து சமர்ப்பிக்கின்றோம்.
என்கிற கோரிக்கை மனுவினை தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் முதல்வர் முக ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ளனர்.
மு க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற இந்த ஒரு வார காலத்தில் எத்தனையோ அதிரடி மாற்றங்களை செய்துள்ளார் இந்த தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்விலும் ஒளி ஏற்று வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....!
