வெளிநாட்டில் எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு தமிழக அரசின் உடனடி வேலைவாய்ப்பு ....!
ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவம் படித்து ஓராண்டு நிறைவு பெற காத்திருக்கும் 500 மருத்துவர்கள் உடனடியாக மருத்துவ பணியை தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வெளிநாட்டில் மருத்துவம் படித்துவம் படித்து முடித்தவர்கள் இந்தியாவில் பயிற்சியின்போது ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். அவர்கள் தமிழகத்தில் பயிற்சி பெறும் வகையில் ஓராண்டு பணிபுரிந்த பின்பே மருத்துவ பணி தொடர வேண்டும் என்பது விதி.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள் தேவை காரணமாக பயிற்சி மற்றும்பயிற்சி கட்டணம் ஆகிய 2 விதிகளையும் தளர்த்தி பணி அளிக்கிறது அரசு.
இதனால் ரஷ்யா, பங்களாதேஷ் உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவம் படித்த சுமா 500 பேருக்கு பணி வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
