லட்சத்தீவு மக்களின் கலாச்சார தனித்தன்மையை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம்

லட்சத்தீவு மக்களின் கலாச்சார தனித்தன்மையை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் இ.யூ.மூ.லீக் சார்பில் தேசிய அரசியல் ஆலோசனைக்குழு சார்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழகம் முழுவதும் லட்சத்தீவு மக்களின் கலாச்சார தனித்தன்மையை பாதுகாக்க வலியுறுத்தியும் சர்வாதிகார  போக்கோடு  செயல்படும் பாபுல்கோடா பட்டேல் என்கிற மத்திய அரசு அதிகாரியை திரும்பப்பெற மத்திய RSS-BJP அரசை வலியுறுத்தி இ.யூ.மு.லீக் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து பாதகைகள் ஏந்தியும், பச்சை பிறைக் கொடி ஏந்தியும் மாவட்ட தலைவர் ஹாஜி வருசை முகம்மது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


 இதில் இ.யூ.மு.லீக் மாநில  பொருளாளர்  ஹாஜி M.S.A ஷாஜஹான் அவர்கள்  சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்பித்தார். மாநில ஊடகப் பிரிவு துணை அமைப்பாளர் அப்துல் ஜபார்,மாவட்ட  துணைச் செயலாளர் யாகூப், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் S. சிராஜுதீன், மாவட்ட சுதந்திர தொழிலாளர் யூனியன் செயலாளர் செய்யது இப்ராஹிம், மாவட்டத் தலைவர் முகம்மது காசிம், மாவட்ட பொருளாளர்  பெரோஸ்கான், நகர மாணவரணி தலைவர் லாபீர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதனைப்போன்று பனைக்குளம், தேவிப்பட்டினம், திருப்பாலைக்குடி, தொண்டி, அறந்தாங்கி, கீழக்கரை, ஏர்வாடி, மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர், வாலிநோக்கம்,சாயல்குடி, முதுகுளத்தூர் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரைமரிகளிலும் மத்திய BJP அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு