மாநகராட்சி ஆணையர் பெயரில் மோசடி....!சீட்டிங் சாம்பியன் கைது!!!! ஆளுங்கட்சி மீது வீண் பழி....!!

 மாநகராட்சி ஆணையர் பெயரில் மோசடி....!சீட்டிங் சாம்பியன் கைது!!!! ஆளுங்கட்சி மீது வீண் பழி....!!


நேற்று இரவு வாட்ஸாப்பில் ஒரு தகவல் பரவியது. அதில் திமுக எம் .எல் .ஏ. ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரது தூண்டுதலின் பெயரில் அராஜகம் ஆரம்பம் என்று குறிப்பிட்டிருந்தனர் மேலும், வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கஸ்பா பகுதியில் வசிக்கும் கஜா என்ற கிருஷ்ணமூர்த்தி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வுக்கு களப்பணி ஆற்றியதால், தற்போது ஆளுங்கட்சியினரின் அவரை பழி வாங்குகின்றனர். வேலூர் மாநகராட்சியின் அதிகாரி, கஜா (எ) கிருஷ்ணமூர்த்தியின் மீது பொய் புகார் அளித்துள்ளார் அதன் காரணமாக, வேலூர் காவல்துறை அவரை கைது செய்தது. இந்த சம்பவத்தைக் குறித்தும் தி.மு.க. ஆட்சியின் அராஜக செயலை குறித்தும் அவருடைய மகள் கண்ணீர் மல்க பேட்டி என்று வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தனர் அதில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தியின் மகள் மற்றும் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் கூடியிருந்தனர் கிருஷ்ணமூர்த்தியை மாஜிஸ்திரேட்டு முன்னிலைக்கு ஆஜர்படுத்த அழைத்துச் செல்ல போலிசார் முயன்றபோது, ஜீப்புக்கு முன் படுத்து அவரது மனைவி மறியல் செய்தார். அதே போல் மாநகராட்சிக்கு முன் நின்றுகொண்டு கிருஷ்ணமூர்த்தியின் மகள் மோனிஷா என்பவர் பேட்டியெல்லாம் கொடுத்தார் இந்த பரபரப்பு சம்பவத்தை தொடர்ந்து உண்மை நிலவரம் அறிய சிலரிடம் பேசினோம் அதிமுகவைச் சேர்ந்த கஜா என்கிற கிருஷ்ணமூர்த்தி வேலூர் மாநகராட்சி பகுதியிலுள்ள நடைபாதை வியாபார சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆவார் மாநகராட்சி அலுவலர்களில் ஒருவரான கண்ணன் என்பவர் தான் இதற்கான தேர்தலை நடத்தியர் இந்த தேர்தலில் அதில் கிருஷ்ணமூர்த்தி வென்று தலைவரானார். தி.மு.க.வைச் சேர்ந்த க.சு.சண்முகம் என்பவர் தோல்வியுற்றார் இந்நிலையில் நடைபாதை வியாபாரிகளுக்கு தனியாக அடையாள அட்டை அதிகார பூர்வமாக வழங்கப்பட்டது இது ஒருபக்கம் இருக்க, லாக்டவுன் நேரத்தில் மார்க்கெட் பகுதி கடைகள் கிருஷ்ணா தியேட்டர் எதிரில் உள்ள கிரவுண்டுக்கு மாற்றப்பட்டது. இதற்கு தனி சங்கம் உள்ளது. அந்த சங்கம் சார்பாக தனி அடையாள அட்டை வியாபாரிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறதுஆக, மேற்படி தற்காலிக மார்க்கெட்டுக்கு குமரேசன் என்கிற  தி.மு.க.வைச் சேர்ந்த கவுன்சிலர் சுங்க வசூல் குத்தகை எடுத்திருந்தார் இந்நிலையில் மேற்படி குமரேசன் தற்போது கைதாகியுள்ள கிருஷ்ணமூர்த்தியை அனுகி, நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின்  அடையாள அட்டை ஒரு பத்து இருபது கொடு, நான் கொத்தமல்லி கறிவேப்பில்லை விற்கிறவர்களை அனுமதிக்கிறேன் என்று கேட்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தியும் அடையாள அட்டைகளை அளித்துள்ளார். இதில் தான் வில்லங்கமே துவங்கியிருக்கிறது அவர் அளித்த மாநகராட்சி அடையாள அட்டைகளில் அலுவர்களின் கையெழுத்தை போலியா போட்டுள்ளார். முத்திரை கூட அவராகவே தயாரித்து பயன்படுத்தி வந்திருக்கிறார் இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளின் பார்வைக்கு ஆளும்கட்சியினரால் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.165 உறுப்பினர்கள் கொண்ட நடைபாதை சங்கத்துக்கு போலியான ஆவணங்களை பயன்படுத்தி 1,600 பேர் உறுப்பினர் என ஆணையரின் கையெழுத்தை போலியாக போட்டு  அடையாள அட்டை தயாரித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டார் இது தான் அவர் கைது செய்யப்பட்டதற்கான உண்மை காரணமாகும். இதில் ஆளுங்கட்சி சார்பாக சற்று பிரஷர் கொடுக்கப்பட்டதாலேயே போலிசார் சுறு சுறுப்பாக கைது செய்தனர்

 “இதில் கூட தனிப்பிரிவு போலிசான முரளி என்பவர் கிருஷ்ணமூர்த்தியிடம் டீல் பேசியதாக கூறப்படுகிறது”கைதான கிருஷ்ணமூர்த்தி  மாநகராட்சி சுகாதாரத் திட்டத்தின் கீழ் 19 லட்சம் செலவில் கட்ட கட்டப்பட்ட கழிவறையை கருவேப்பிலை குடோனாக பயன்படுத்தி வருகிறார் மேலும், இதே கிருஷ்ணமூர்த்தி சிறு வணிகர் கடன்,மகளிர் குழ கடன் பெற்று தருகிறேன் என மோசடியில் ஈடுபட்டதாக அப்போது நடைபாதை வியாபாரிகள் புகார் தெரிவித்தனர்.அதன் பின்னர் நடைபாதை வியாபாரிகளின் பணம் திரும்ப  அளிக்கப்பட்டது.

தற்போது கஜா என்கிற கிருஷ்ணமூர்த்தி மீது புகார்கள் குவிந்து வருகின்றன 

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...