மதம் கடந்த மனிதநேய பணியில் தமுமுக தன்னார்வலர்கள்...
இரவு பகல் பாராமல் என்றும் மதம் கடந்த மனிதநேய பணியில் தமுமுக தன்னார்வலர்கள்...
இராணிப்பேட்டை மாவட்டம் - ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் நகரம் - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர
இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று *ஓரே நாளில் 4-உடல்களை* அடக்கம் செய்தனர்..
1. *திரு.சக்ரவர்த்தி*
வயது:65, கதவு எண்:3/78, பஜனை கோயில் தெரு, பழைய மாங்காடு, ஆற்காடு தாலுகா.
2. *திரு.ராமச்சந்திரன்*
வயது:63 கதவு எண்:4/10 சலீம் நகர், கீழ்விஷாரம்
3. *ஜனாப்.அஹமத் பாஷா*
( தாஜ் கேண்டீன் உரிமையாளர் ) வயது:78, கதவு எண்:02, காதர் ஜன்டா தெரு, கலவை ரோடு, ஆற்காடு.
4. *திரு.முரளி* வயது:35, கதவு எண்:30,, கரடி மலை, ஆற்காடு போஸ்ட், வாலாஜா தாலுகா.
இவர்கள் அனைவரும்
கோரோனா தோற்று நோயால் மரணமடைந்தார்கள்.
ஆற்காடு, வாலாஜா மற்றும் வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து அவர்களின் உடலைப் பெற்று அவரவர் சொந்த மதத்தின் படி அவரவர் சொந்த ஊரில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
.இவர்களின் மனித நேய சேவையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

