கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் கணேசன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்....
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர்,ரோட்டரி கிளப் தலைவர். விதைகள் அமைப்பின் தலைவர், விநாயகர் நர்சரி பிரைமரி பள்ளி காவேரிப்பட்டினம் பள்ளி தாளாளர் Rtn..DR. PSG. கணேசன் அவர்கள்.. கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த ஒரு வார காலமாக கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறைவனடி சேர்ந்து விட்டார் என்கிற துயரச் செய்தி கேட்டு என் உள்ளம் துடிதுடித்தது.
நமது சங்கத்தின் உயிர்நாடியாக கடுமையான உழைப்பின் காரணமாக உயர்ந்து ஒளி வீசிய ஒளிவிளக்கு
நமது சங்கத்தின் கலங்கரை விளக்கு பி எஸ் ஜி கணேசன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். அவரை இழந்து வாடும் அவரது மனைவி கீதா மற்றும் மகனும் மகளும் தவிக்கிற தவிப்பு நம் கண்களை மட்டுமல்ல பார்ப்போர் கண்களை எல்லாம் கலங்கச் செய்கிறது.
கடைசி நொடிப்பொழுதில் கூட யாரும் அவரை பார்க்க முடியவில்லையே என்கிற வேதனை ஒருபுறம்....
அவர் பூத உடல் நம்மை விட்டு பிரிந்தாலும் புகழுடல் என்றென்றைக்கும் நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் ஒவ்வொரு நிர்வாகிகளின் இதயங்களிலும் நிழலாடுகிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு நமது மாநில சங்கம் என்றைக்கும் நிழல் தரும் மரமாக இருந்து ஆதரிக்கும். அன்னாரை இழந்து வாடும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் அனைவருக்கும் எங்கள் ஆறுதலையும் கண்ணீர் அஞ்சலியையும் காணிக்கையாக்குகிறோம்.
கனவு நாயகன்
பி.எஸ். ஜி கணேசன் அவருடைய கனவுகளை மெய்பட செய்வோம்.
வற்றாத கண்ணீருடன்.....
கே. ஆர். நந்தகுமார். மாநில பொதுச் செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள்.
