மேட்டுப்பாளையத்தில் இரண்டு அமைச்சர்கள் கொரோனா தடுப்பு பணிகள் பற்றிய ஆய்வு

மேட்டுப்பாளையத்தில் இரண்டு அமைச்சர்கள் கொரோனா தடுப்பு பணிகள் பற்றிய ஆய்வு


மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வு மேற்கொள்ள 27-05-2021 இன்று உணவுத்துறை அமைச்சர் மாண்புமிகு *திரு.அர.சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் மாண்புமிகு வனத்துறை திரு.க.ராமச்சந்திரன்  அவர்கள்*  மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்தார்கள்.தமுமுக - மமக சார்பில் மாவட்ட துணை செயலாளர் மு.அப்துல்ஹக்கீம் அவர்கள் தலைமையில் தமுமுக நகர செயலாளர் முஹம்மது சேட்,தமுமுக -மமக துணை தலைவர் ஷானவாஸ்,தமுமுக துணை செயலாளர்கள் :யாசர் அரபாத்,ஷவ்கத்அலி,

அன்சாரி, பாஜில் ஆகியோர் கலந்துகொண்டு  ஆக்ஸிஜன்,கொரோனா   தடுப்பூசிகள்,மற்றும் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை உடனடியாக மேட்டுப்பாளையம் மருத்துவனைக்கு தருமாறு தமுமுக - மமக  சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

மருத்துவர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்,  ஆகவே  முதல்கட்ட தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வோம் என வாக்குறுதி அளித்தனர்.