தனியார் பள்ளிகளுக்கு கால அவகாசம் வழங்கி உத்தரவு

தனியார் பள்ளிகளுக்கு கால அவகாசம் வழங்கி உத்தரவு



 தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தனியார் பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக்குழு நீதியரசர் அவர்கள்  தனியார் பள்ளிகளின் வரவு செலவு கணக்குகளை 17 .05. 2021  க்குள் அனைத்து தனியார் பள்ளிகளும் தாக்கல் செய்ய வேண்டும் என்கிற உத்தரவுக்கு இக்கொடிய குரோனோ நோய்த்தொற்று காலத்தில் பள்ளிகள் நடக்காதபோது உரிய ஆவணங்களை வழங்கிட  முடியாது என்று நமது சங்கம் வைத்த கோரிக்கையை ஏற்று வருகின்ற 30.06. 2021 வரை ஒன்றரை மாத கால அவகாசம் வழங்கி உள்ளார்கள் என்கிற தகவலை பள்ளி நிர்வாகிகளுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

இது மட்டும் நமக்குப் போதாது நமது நியாயமான கோரிக்கையை ஏற்று அரசு ஒரு மாணவனுக்கு செலவிடும் கட்டணத்தை கல்விக் கட்டணமாக நிர்ணயம் செய்து தரும் வரை தொடர்ந்து நாம் நமது உரிமைகளை உங்கள் ஒற்றுமையோடு முன்வைப்பதற்கு பெறுவதற்கு பள்ளி நிர்வாகிகள்  அனைவரும் ஆதரவு தாரீர் என்று அன்போடு வேண்டுகிறேன்.

அன்புடன் உங்கள்

  K.R.நந்தகுமார்..