அனைத்து வகை பள்ளிகளுக்கும் சமமான நியாயமான நேர்மையான கல்விக் கட்டணத்தை வழங்க வேண்டும்: கல்வி கட்டண குழு தலைவருக்கு கே ஆர் நந்தகுமார் வேண்டுகோள்
பள்ளி கல்வி கட்டண நிர்ணய குழுவுக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட வேண்டுகோள் கடிதம்....
தமிழகத்தில் கடந்த 15 மாதங்களாக எந்த ஒரு தனியார் பள்ளியும் நடைபெறவில்லை என்பது தாங்கள் அறியாததல்ல.
சென்ற ஆண்டு முழுக்க பள்ளிகள் திறக்காததால் நேரிடையாக பாடம் நடத்த முடியாததால் பெற்றோரிடம் கல்வி கட்டணம் வசூலிக்க முடியாததால் பல பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாததால் வாங்கியுள்ள கடனுக்கு வட்டியும் தவணையும் கட்ட முடியாததால் பல பள்ளி நிர்வாகங்கள் பள்ளிகளை திறந்து அலுவல் பணிகள் கூட ஆற்ற முடியாததால் எந்தவித வரவும் செலவும் செய்ய முடியாததால் தாங்கள் கேட்ட கல்விக்கட்டணம் சம்பந்தமான எந்த ஆவணங்களும் வங்கி வரவு செலவு கணக்குகளும் தற்போதுள்ள குரோனா நோய்தொற்று ஊரடங்கு காரணமாக தாங்கள் குறிப்பிட்டுள்ள 17.05. 2021ல் அனைத்து விவரங்களும் தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதை நிச்சயம் எந்த
பள்ளியாலும் அனுப்பிட முடியாது என்று பள்ளி நிர்வாகிகள் அனைவரும் எங்கள் சங்க உறுப்பினர்கள் என்பதால் எங்கள் மாநில சங்கத்திடம் முறையிட்டுள்ளனர்.
தாங்கள் அனுப்பிய சுற்றறிக்கையைகூட இன்னும் முழுமையாக அனைத்து தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கும் முதன்மை கல்வி அலுவலர் மூலம் இன்னும் வந்து சேரவில்லை.
அதனால் நீங்கள் அனுப்பிய சுற்றறிக்கை பள்ளி நிர்வாகிகளுக்கு சேராததால் நூற்றுக்கணக்கான பள்ளி நிர்வாகிகள் கொரோனா நோய்தொற்றுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாலும் பலராலும் தங்களுக்கு தர வேண்டிய ஆவணங்களை உடனடியாக நீங்கள் சொன்ன 17.05. 2021 தேதிக்குள் அனுப்ப முடியாதநிலையில் உள்ளதால்.....
இந்த வேண்டுதல் விண்ணப்பத்தை தங்களுக்கு எங்கள் மாநில சங்கம் அனுப்பியுள்ளது.
தமிழக அரசே
10.05. 2021 முதல் 24.05. 2021 வரை அனைவருக்கும் பொது ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் பள்ளி அலுவலகம் இயங்குவது சாத்தியமில்லை.
மேலும் கல்வி கட்டண நிர்ணயக் குழு சென்றாண்டு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் பாதியாக குறைத்து அறிவித்துள்ளதால் பள்ளி நிர்வாகிகள் பலரும் மிகுந்தமன உலைச்சலில் உள்ளனர். தங்களுக்கு மீண்டும் மேல்முறையீடு செய்தும் பள்ளி நிர்வாகிகள் கேட்ட நியாயமான கல்வி கட்டணம் கிடைக்கவில்லை. சென்றமுறை நிர்ணயித்த கல்விக் கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் உயர்த்தி கொடுத்தால் மட்டும் தான் தனியார் பள்ளிகளால் தமிழகத்தில் இனிமேல் பள்ளிகளை நடத்திட முடியும்.
ஒவ்வொரு பள்ளியும் தனித்தனியாக தொடர்ந்து தங்களுக்கும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உரிய கட்டணத்தை பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. எனவே இயற்கைக்கு மாறான தீர்ப்பாக தாங்கள் நிர்ணயிக்கும் கல்விக்கட்டணம் உள்ளதால் எந்த பள்ளி நிர்வாகிகளும் மனசாட்சியோடு ஏற்றுக்கொள்ள இயலவில்லை. நீங்கள் நிர்ணயிக்கும் கட்டணம் மிக மிக குறைவு. அதை வைத்துக் கொண்டு எந்த பள்ளியையும் நிம்மதியாக நடத்த முடியாது..
அரசு பள்ளிகள் குறைந்தபட்சம் 35 ஆயிரம் ரூபாய் முதல் 40,000 வரை ஒரு மாணவனுக்கு செலவழிக்கிற போது தனியார் பள்ளிகள் மட்டும் ஐந்தாயிரம் பத்தாயிரம் மட்டும் நிர்ணயித்து அதுவும் சென்ற ஆண்டு கட்டணத்தை பாதியாக குறைத்து தருவதை எங்கள் சங்கம் சார்ந்த பள்ளி நிர்வாகிகள் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில் உள்ளோம்.
நீங்கள் நிர்ணயித்துள்ளகல்வி கட்டணம் பள்ளி நிர்வாகிகள் தற்கொலைக்கு தூண்டக்கூடியதாக உள்ளது. எனவே நாள்தோறும் ஏறும் விலைவாசிகள் ஆசிரியர்கள் சம்பளம் நாள்தோறும் நடைபெறும் செலவுகள் வாங்கியுள்ள கடன் கடனுக்கான வட்டி பள்ளிகளை
இப்போட்டி யுகத்தில் நடத்தும் போது ஏற்படக்கூடிய செலவுகள் இவை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
அங்கீகாரம் பெறுவதற்கு ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளும் லட்சக்கணக்கில் செலவழிப்பது தங்களுக்கு நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
அது எல்லாம் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதும் இல்லை. அதற்கான ரசீது கொடுக்க முடியாத சூழல் உள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு மாதிரியான கட்டணமே வரும்போது ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு மாதிரியான புது பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும் செலவுகள் ஒரே மாதிரி ஆகும் குறைந்த மாணவர்கள் இருந்தாலும் அதே செலவுகள் ஆகும் அதிகமானவர்கள் இருந்தாலும் செலவுகள் இன்னும் கூடும் என்று நாங்கள் சொல்லி தங்களுக்கு தெரியவேண்டிய தில்லை.
இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக ஐந்தாம் வகுப்பு வரை ஒரு கட்டணமும்... எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரே மாதிரியான கட்டணமும்...
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டணமும் பன்னிரண்டாம் வகுப்பு கட்டணம் கட்டணம் என்று நான்கு வகையான கட்டணங்களை கணக்கிட்டு அரசு ஒரு பள்ளி மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ அதையே கல்வி கட்டணமாக கொடுத்தால் போதுமானது..
அதற்கு மேல் யாரும் எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது. என்று கடுமையான உத்தரவை சட்டத்தைப் போட்டு அமல்படுத்தலாம்.
அதற்கு மேல் ஒரு பள்ளிக்கு அதிகபட்சமாக கட்டணம் வேண்டும் என்றால் அந்த பள்ளியில் உள்ள வசதி வாய்ப்புகளை ஆய்வு செய்து அவர்களுக்கு வேண்டுமானால் உயர்த்தி கொடுக்கலாம்.
அதை விட்டுவிட்டு ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு மாதிரியான கட்டம் என்பது நியாயப்படியும் தர்மப்படியும் சரியாக வராது.
அரசு...பள்ளி நிர்வாகிகளை ஏமாற்றினால்
பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை ஏமாற்ற தான் செய்வார்கள்..
எனவே ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் உண்மையாக...
அரசு நினைத்தது நடக்க வேண்டும் என்றால் பெற்றோர்களுக்கு பயன் தர வேண்டுமென்றால் நியாயமான ஒரே மாதிரியான கல்வி கட்டமும் நிர்ணயிப்பது ஒன்றுதான் சரியாக இருக்கும்..
அதை செவ்வனே செய்து முடித்து விட வேண்டும் என்று வேண்டுகின்றோம்.
ஆர். டி. இ. கல்விக்கட்டணம் அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணம் தனியார் பள்ளிகள் நிர்ணயித்து வாங்கும் கட்டணம் இந்த மூன்று வகையான கட்டண வேறுபாடுகள் உள்ளதை இந்த உலகம் அறியும்...
எனவே அனைவருக்கும் ஒரே மாதிரியான நியாயமான கல்வி கட்டணத்தை வழங்குவது ஒன்றுதான் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும்..
தமிழக அரசு தரும் சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தை தான் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். எனவே ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு விதமான பாடங்களை நடத்துவது இல்லை. எனவே ஒரே மாதிரியான சமச்சீர் பாடத்திட்டத்திற்கு ஏற்ற ஒரே மாதிரியான கல்வி கட்டணம் நிர்ணயிப்பது ஒன்றுதான் சரியாக இருக்கும்.
வேறு மாதிரியான பாடம் நடத்தக்கூடிய சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிப்பது கிடையாது.
ரோமன் கத்தோலிக்க பள்ளிகளுக்கு மட்டும் அதிகபட்சமான கட்டணத்தை தங்களிலிருந்து நிர்ணயித்து தருகிறீர்கள்.. சட்டத்தை சுட்டிக் காட்டுகிறீர்கள்.
எமக்கு மாண்புமிகு நீதியரசர் அய்யா அவர்கள் அருள்கூர்ந்து தனியார் பள்ளிகளின் பிரச்சனைகளை கஷ்டங்களை
நஷ்டங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு பள்ளிகள் நடக்காத இந்த கொடிய குரோனா நோய்த்தொற்று காலத்தில் அனைத்து ஆவணங்களையும் உடனே கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என்றால் அது இயலாத காரியம்.
எனவே இன்னும் பள்ளிகள் திறந்து மாணவர்கள் வந்து பத்திரமாக பாதுகாப்பாக படித்து விட்டு போகும் வரை பள்ளி கல்வி கற்றவன் சம்பந்தமான ஆவணங்கள் கேட்பதை நிறுத்தி வைக்க வேண்டும்.
அதுவரை சென்றாண்டு நிர்ணயித்த கல்வி கட்டணத்திலிருந்து கூடுதலாக 10 சதவீதம் உயர்த்தி அனைவருக்கும் பொதுவான ஒரு உத்தரவை வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பணிவோடு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்....
தங்கள் உண்மையுள்ள
கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர். நாள்.. 11. 05 2021.
