பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வை விட வகுப்பறை தேர்வே முக்கியம் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை

 பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வை விட வகுப்பறை தேர்வே முக்கியம் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை



பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வை விட வகுப்பறை தேர்வே முக்கியம் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே ஆர் நந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

 இந்தக் கொடிய குரோனா  நோய் தொற்று காலத்தில் தாங்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி பள்ளிக்கல்வித்துறைக்கு பெரும் பங்காற்றி வருவதை எமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் உளப்பூர்வமாக பாராட்டுகிறோம்.

 சென்ற ஆண்டு முழுக்க வகுப்பறையில் பாடம் நடத்தவில்லை என்றாலும் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் மிகச் சிறப்பான முறையில் இணையதளம் வழியாக பாடங்களை நடத்தி முடித்திருக்கிறோம். அன்றைக்கிருந்த அரசு பாடங்களை குறைப்பதாக  சொன்னாலும் கடைசி வரை எவ்வளவு பாடல்களை  குறைத்தார்கள்  என்ற விவரங்களை வெளியிடா விட்டாலும்.... நாங்கள் முழுமையாக அனைத்து  பாடங்களையும்  நடத்தி முடித்திருக்கிறோம். இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு நடத்துவது என்பது தவிர்க்கமுடியாதது. காரணம் அந்த மாணவர்கள்  உயர் கல்வி தொடர வேண்டுமென்றால் கட்டாயம் அரசு பொதுத்தேர்வு எழுதி அவர்களுக்குரிய மதிப்பெண்களை போட்டு அனுப்பினால் தான் அவர்களுக்கு வேண்டிய பாடங்களைத் தேர்வு செய்து படித்து  பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற முடியும். அவர்கள் வாழ்வில் உயர முடியும் என்பது தவிர்க்க முடியாதது.

 அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட்போன் இல்லை என்பதாலும் அனைத்து இடங்களிலும் இணையதள வசதி கிடைக்காது என்பதாலும் அதில் ஓரிரு மாணவர்கள் பாதிக்கப்பட்டால் கூட அது நமது நல்ல அரசுக்கு அவப்பெயரை உருவாக்கும் என்பதாலும் அவர்கள் எதிர்காலம் பாதிக்கும் என்பதாலும் வேறுவழியின்றி

நாம் வகுப்பறை தேர்வுகளை நடத்தி ஆக வேண்டும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

இந்நிலையில் இந்தக் கொடிய நோய் தொற்று காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பாக அச்சமின்றி தேர்வு எழுத வேண்டுமானால்  அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நோய் தடுப்பு ஊசியை கட்டாயம் உடனடியாக அந்தந்த பள்ளிகளிலேயே உடனடியாக போட தொடங்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் அனைவரும் இரண்டு தடுப்பு ஊசிகளையும் போட்டுக் கொள்ள முடியும். நடைமுறையிலுள்ள ஊரடங்கு காலம் முடிந்தவுடன்... குரோனா  தோற்று குறைந்தவுடன் ஜூலை முதல் வாரத்தில் தேர்வு நடத்துவோம் என்கிற உறுதிமொழியையும் தேர்வு கால அட்டவணையை உடனே வெளியிட்டு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நம்பிக்கையை உருவாக்கி சமூக இடைவெளியோடு வகுப்பறைக்கு 10 மாணவர்களை

அமர வைத்து கிருமிநாசினிகள் தெளித்து பாதுகாப்போடு எளிமையான ஆப்ஜெக்டிவ் டைப் ஆப்  கேள்விகளை கேட்டு தேர்வுகள் நடத்தி மதிப்பெண்கள் போட்டு அனைவருக்கும் விரைவாக தேர்வு முடிவுகள் வெளியிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்கி உயர்கல்விக்கு அனுப்பிய உதவலாம் அதற்கேற்றார் போல் திட்டமிட்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் ஆயுதங்களை பணிவோடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

கே. ஆர். நந்த குமார் மாநிலசெயலாளர்.