வெள்ளி மலை கிராமத்தில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.10 ரூபாய் இயக்கம் நேரடி கள ஆய்வு...
மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் சந்திரப்பட்டி ஊராட்சியில் உள்ள வெள்ளிமலை கிராமத்தில் நரிக்குறவர் இன மக்கள் 200குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.
.அப்பகுதி நரிக்குறவர் மக்களுக்கு பல குடும்பங்களுக்கு வீட்டுமனை இடம் இல்லாததால் தமிழக அரசின் கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றனர் ..அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று காட்டேரி ஊராட்சி 120குடும்பங்களுக்கு 03சென்ட் வீதம் வீட்டுமனை இடத்தை அரசு ஒதுக்கி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு சில புரோக்கர்களால் அப்பகுதி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனை இடத்தை வேறு மாவட்டத்தைச் சார்ந்த நபர்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பட்டா வழங்கப்பட்டுள்ளதாக பத்து ரூபாய் இயக்கத்திற்க்கு புகார் மனு வரப்பெற்றது.
இந்த புகார் மனுவின் பேரில் இன்று 23.05.2021வெள்ளி மலையில் உள்ள நரிக்குறவர் இன மக்களிடம் நேரடியாக பத்துரூபாய் இயக்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் G.கோவிந்தராஜ். மத்தூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்.V.திருமூர்த்தி. ஊத்தங்கரை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்.A.மணி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர் ....
புரோக்கர்கள் மற்றும் அவர்களின் பிடியில் உள்ள அரசு அதிகாரிகளின் அத்து மீறல்களை தடுத்து நிறுத்தி
வெள்ளி மலை கிராமத்தில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

