வாட்ஸ்அப்பில் எப்படி தேர்வு எழுத முடியும்.....? 12-ம் வகுப்பு பயிலும் 30% அரசு பள்ளி மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லை*

வாட்ஸ்அப்பில் எப்படி தேர்வு எழுத முடியும்.....? 12-ம் வகுப்பு பயிலும் 30% அரசு பள்ளி மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லை*



12-ம் வகுப்பு பயிலும் 30 சதவிகித அரசு பள்ளி மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லை என்று மாவட்டங்களிலிருந்து பள்ளிக்கல்வித்துறை பெற்ற தரவுகளில் தகவல் வெளியாகியுள்ளது.

கொரொனா பரவல் காரணமாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் தமிழகத்தில் 12-ம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களில் 30 சதவீத மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு அளித்த தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மொத்தமுள்ள 9 லட்சம் மாணவர்களில் ஏறத்தாழ 3.50லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை சேர்ந்தவர்கள். அந்த அடிப்படையில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லை.

தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் ஆசிரியர்கள் வாட்ஸ்அப் வழியாக திருப்புதல் தேர்வு மற்றும் அலகுத் தேர்வு போன்றவற்றை நடத்தி வருகின்றனர்.

ஒருவேளை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டால் அலகுத்தேர்வு அல்லது திருப்புதல் தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுத்தால் ஸ்மார்ட்போன் இல்லாத மாணவர்களுக்கு மதிப்பெண் எவ்வாறு வழங்குவது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.