வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள 11 ஆயிரம் சிறுவர்கள்?
இலங்கையிலிருந்து சுமார் 11 ஆயிரம் சிறுவர்கள் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சட்ட விரோதமான செயல்பாடுகள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நபர்கள் இதுவரை சுமார் 11 ஆயிரம் சிறுவர்களை விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் குழு ஒன்று இந்த விடயத்தை கண்டறிந்துள்ளது. இந்த பிள்ளை பற்றி விசாரணை நடத்துமாறு ஐ.நா குழு சுவிஸர்லாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் சுவிஸ் அரசாங்கம் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
பெண் சட்டத்தரணி ஒருவர் உட்பட சிலர் இந்த வர்த்தகத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
சுவிஸர்லாந்து நாட்டில் மாத்திரம் 200க்கும் மேற்பட்ட இலங்கை சிறார்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த பிள்ளைகளை தத்தெடுத்த சுவிஸ் பிரஜைகள் குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது