ஜூன் மாதம் 2ம் தேதி பள்ளிகள் திறக்க ......... ஒன்றிணைவோம் வாருங்கள்.....! கே ஆர் நந்தகுமார் அறைகூவல்
மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு....
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் வருகிற 10ஆம் தேதி சென்னை தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகம் மற்றும் பீஸ் கமிட்டி அலுவலகம் முன்பு நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் தவறாமல் கலந்து கொள்வதற்கு வேண்டிய வேலைகளை இன்றே இப்பொழுதே தொடங்கிட வேண்டும்.
அனைத்து மாவட்ட மாநில ஒன்றிய நகர சங்கத்தின் தலைவர்களில் ஒருவர் கூட விட்டுவிடாமல் உங்கள் பெயர்களை போட்டு உடனடியாக போஸ்டர்கள் பேனர்கள் தயார் செய்து உங்கள் பகுதியில் ஒட்டுங்கள்.
ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளையும் சந்தித்து பேசுங்கள்.
உங்கள் பகுதியில் இருந்து எத்தனை பேர் வருகிறார்கள் என்கிற தகவலை உடனடியாக இந்த வாட்ஸ் அப் குழு மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அப்போதுதான் ஒருவரைப் பார்த்து ஒருவர் நான் வருகிறேன் என்று தங்கள் பெயர்களை போடுவார்கள்.
ஒருவரைக்கூட விட்டுவிடக்கூடாது வேலையும் வருமானமும் இல்லாத இந்த நேரத்திலாவது தினசரி ஒரு நாளைக்கு பத்து பேரையாவது சந்தித்து பேசி சங்கத்தில் உறுப்பினராக்கி சங்கத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யவும்..
பள்ளிகள் திறந்துவிட்டால் அதற்கான நேரம் இருக்காது..
எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் 13 மாதங்களாக வீட்டில் இருந்து விட்டோம். இருக்கிற இடத்தில் இருந்து தொலைபேசியில் பேசி அனைவரையும் தவறாமல் சென்னைக்கு அழைத்து வந்து அங்கு நமது சக்தியைக் காட்டி வரக்கூடிய புதிய அரசாங்கத்திடம் நமது கோரிக்கைகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நம்மை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் ஒத்துழைத்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும்.
எனவே தயவு செய்து எத்தனை சிரமங்கள் பிரச்சனைகள் கஷ்டங்கள் நஷ்டங்கள் இருந்தாலும் அத்தனை பிரச்சனைகளுக்கும் விடிவு நாம் அனைவரும் ஒன்றுபட்டு நமது சக்தியை காட்டுவது ஒன்று மட்டும் தான் நமது கோரிக்கைகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து சகோதர சகோதரிகளும் 100% ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என்று இரு கரம் கூப்பி வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.
அன்புடன் உங்கள்
கே. ஆர். நந்த குமார்.