தன்னலமற்ற சேவையாளர் விருது

தன்னலமற்ற சேவையாளர் விருது



மயிலாடுதுறை மாவட்டத்தில் வர்த்தக சங்கங்கள் வணிக சங்கம் சார்பாக அனைத்து சமுக அமைப்பினர் முன்னிலையில் நடைபெற்ற வருடாந்திர விழா நிகழ்வில் நம் மயிலாடுதுறை மண்ணில் தொடர்ந்து 4 வருடங்கள் க்கு மேல் தினசரி சாலையோர பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை உணவு அளித்து வரும் ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் நம்முடைய அன்புக்குரிய இனிய நண்பர் ஐயா திரு ஜோதி ராஜன் அவர்களுக்கு "தன்னலமற்ற சேவையாளர்" என்கின்ற  விருதினை வழங்கி கௌரவப்படுத்தினார்கள்.... அத்தகைய மகத்தான விருதுபெறும் அன்புக்குரிய நண்பர் திரு ஜோதி ராஜன் அய்யா அவர்களுக்கும் நகர அனைத்து நலச்சநலச்சங்கம் பொறுப்பாளர்கள் வணிகசங்கம் தலைவர்கள் உறுப்பினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எங்களுடைய மேலான நன்றிகளையும் வாழ்த்துக்களையும தெரிவித்துக் கொள்கிறோம்