திருவாடானை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆணிமுத்து வை ஆதரித்து பிரச்சாரம்

திருவாடானை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆணிமுத்து வை ஆதரித்து பிரச்சாரம் 



ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக  கூட்டணி வேட்பாளர் K.C. ஆணிமுத்துவை ஆதரித்து தொண்டியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். வட்டாணம் விளக்கு சாலையில் திறந்து வெளி வேனில் நின்றபடி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து அவர்

 பேசியதாவது:-

திருவாடானை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆணிமுத்து நாம் அனைவரும் எழிதாக சந்திக்ககூடிய நல்ல மணம்படைத்த வேட்பாளர் நாம் எந்த நேரத்திலும் சந்திக்கலாம் எல்லா மதத்தினருடனும் நன்றாக பழக கூடியவர் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது இஸ்லாமிய மக்களுக்கு வக்பு வாரியம் மூலம் ஏராளாமான சலுகைகளை வாரி வழங்கினார். அந்த வகையில் இஸ்லாமிய சொந்தங்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும். மத்திய அரசு தலாக் சட்டத்தை கொண்டு வந்தபோது எடிப்பாடி அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் MPக்கள் மூலம் பேசப்பட்டது. கட்சச்தீவு மீட்க குரல் கொடுப்போம். 40 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு தேவேந்திரகுல வேளாளர் என அரசாணையை   முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பரிந்துரை செய்ததின் அடிப்படையின் மத்திய அரசு சட்டமாக்கி உள்ளது. ஆனால் இந்த சட்ட மசோதாவிற்கு திமுக எம்பிக்கள் ஆதரவு தெரிவிக்காமல் வெளிநாட்டுப்பு செய்தனர். அந்த வகையில் திமுக தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு துரோகம் செய்துவிட்டது. ஆனால் இன்று திமுக தேவேந்திரகுல வேளாளர் மக்களின் வாக்குகளை பெருவதற்கு வருகிறது. இதனை மக்கள் புரிந்துகொண்டு அவர்களுக்கு பாடம்  புகட்ட வேண்டும். எனவே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை அளித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்  என்று அவர் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி  N.A. ஜெரினா பானு

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்