சிலிண்டர் புக்கிங்... ரூ.500 கேஷ் பேக் பெறுவது எப்படி?

 

சிலிண்டர் புக்கிங்... ரூ.500 கேஷ் பேக் பெறுவது எப்படி?

அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே கேஷ் பேக் பெறலாம்.

  • சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு உங்களுக்கு 500 ரூபாய் வரையில் கேஷ் பேக் கிடைக்கும். அதை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம்.

பேடிஎம் செயலியில் சலுகை!

வீட்டு உபயோகத்துக்கான சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் இப்போது அதிகமாக முன்பதிவு செய்கின்றனர். மொபைல் ஆப் மூலமாக முன்பதிவு செய்வதற்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதால் இந்த முறையை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். பேடிஎம் நிறுவனம் சிலிண்டர் முன்பதிவுக்கு சிறப்புச் சலுகை வழங்குகிறது. இந்த ஆப் மூலமாக முன்பதிவு செய்தால் உங்களுக்கு 500 ரூபாய் வரையில் கேஷ் பேக் கிடைக்கும்.

முன்பதிவு செய்வது எப்படி?

பேடிஎம் ஆம் மூலமாக முதல் முறையாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் செயலியில் உள்ள Book Cylinder என்ற வசதியில் சென்று உங்களுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில், பாரத் கேஸ், இண்டேன் மற்றும் ஹெச்பி கேஸ் ஆகிய மூன்று நிறுவனங்களின் பெயர் இருக்கும். அதில் நீங்கள் சிலிண்டர் வாங்கும் நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர் உங்களது மொபைல் எண் அல்லது எல்பிஜி ஐடி நம்பரைப் பதிவிட்டு proceed கொடுக்க வேண்டும். நுகர்வோரின் பெயர், சிலிண்டர் ஏஜென்சி பெயர், சிலிண்டரின் விலை போன்ற விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.

என்ன செய்ய வேண்டும்?

Processs கொடுப்பதற்கு முன்பாக FIRSTLPG என்ற புரோமோ கோடை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு கேஷ் பேக் சலுகை கிடைக்கும். இந்த புரோமோ கோடை பதிவு செய்து முன்பதிவு செய்தால் உங்களுக்கு 500 ரூபாய் வரையில் கேஷ் பேக் கிடைக்கும். எனவே உடனடியாக உங்களது சிலிண்டர் முன்பதிவுக்கு பேடிஎம் செயலியைப் பயன்படுத்தி கேஷ் பேக் சலுகையைப் பெறுங்கள். கொரோனா பாதிப்பால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள இச்சூழலில் பேடிஎம் நிறுவனத்தின் இச்சலுகை வரவேற்பைப் பெற்றுள்ளது.