சீனாவுக்கு இந்தியா வைத்த ஆப்பு... ஆப் முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு!
இந்தியா - சீனா இடையிலான மோதல் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. டிக்டாக் - TikTok, ஷேர் இட்- Shareit, யுசி பிரவுசர் - UC Browser, ஹெலோ - Helo, எம்ஐ கம்யூனிட்டி - Mi Community, செண்டர் - Xender உள்ளிட்ட 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
சீனாவிற்கு எதிரான இந்தியாவின் ஸ்மார்ட் மூவ் இது என்று கூறுகிறார்கள். சீனாவின் செயலிகள் இப்படி தடை செய்யப்பட்டதை உலக நாடுகள் ஆதரிக்க தொடங்கி உள்ளது. அமெரிக்காவின் Secretary of State Mike மைக் பாம்பியோ இது தொடர்பாக பதில் அளித்துள்ளார்.
மைக் பாம்பியோ தனது பேச்சில், சீனா உலகம் முழுக்க பல்வேறு நாடுகள் மீது அத்துமீறி வருகிறது. முக்கியமாக சீனாவில் இருக்கும் சிறுபான்மையினர் மீது அந்த நாடு தொடர்ந்து அத்துமீறி வருகிறது. தங்கள் நாட்டில் இருக்கும் ஊய்கூர் இஸ்லாமியர்கள் கருத்தடை செய்ய வேண்டும் என்று உத்தரவிடுகிறது. அவர்களுக்கு கருக்கலைப்பு செய்யும் பணிகளையும் மேற்கொள்கிறது. இது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. மனித இனத்திற்கு எதிராக சீனா செயல்படுகிறது.
சீனாவின் இந்த செயலுக்கு எதிராக உலக நாடுகள், உலக அமைப்புகள் கொதித்தெழ வேண்டும். உலக நாடுகள் சீனாவை தட்டிக்கேட்க வேண்டும். போராளிகள், ஐநா எல்லோரும் சீனாவை எதிர்க்க வேண்டும். சீனாவின் செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவை நாங்கள் ஆதரிக்கிறோம். சீனா மற்ற நாடுகளை உளவு பார்க்கிறது.
இந்தியாவின் இந்த முடிவு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு ஆகியவைற்றை இது உறுதி செய்யும். இந்தியாவின் "கிளீன் ஆப்" திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இந்தியா இதன் மூலம் தனது பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. உலக நாடுகள் இது போல சீனாவை தட்டிக் கேட்க வேண்டும் என்று பாம்பியோ தெரிவித்துள்ளார்.
முக்கியமாக சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா களமிறங்க தொடங்கி உள்ளது. அதன்படி அமெரிக்காவில் தற்போது ஹுவாவே டெக்னலாஜி (Huawei Technologies) மற்றும் இசட்டிஇ கார்ப்பரேஷன் (ZTE Cor) ஆகிய நிறுவனங்களின் பொருட்களுக்கு, சேவைகளுக்கு, தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்ட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை யாரும் பயன்படுத்த கூடாது என்று மற்ற நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.