மக்கள் பணியில் வேலூா் மகேஷ் காபி பாா்

மக்கள் பணியில் வேலூா் மகேஷ் காபி பாா்



வேலூா் கிரீன் சா்க்கிள் மற்றும் வெல்லூா் கிட்சன் அருகில் மகேஷ்வரன் என்பவா் கடந்த 25 வருடங்களாக மகேஷ் காபி பாா் என்கிற தேநீா் கடையை நடத்தி வருகிறாா். இவா் தனது கடையில் டீ, காபி தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் பாலை மட்டுமே பயன்படுத்தி வருகிறாா். வேறு எந்த நிறுவனத்தின் பாலையும் இவா் வாங்குவதில்லை. இதற்கு காரணம் அரசு நிறுவனத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பது தான்.


மேலும் இந்த நிறுவனத்தின் மூலம் தான் சம்பாதிக்கும் பெரும்பான்மையான பணத்தை சமூக சேவைக்கு பயன்படுத்தி வருகின்றாா். வருடம் தோறும் முன்னாள் குடியரசு தலைவா் அப்துல்கலாம் மற்றும் முன்னாள் தமிழக முதல்வா் கா்மவீரா் காமராஜாின் பிறந்த நாள் விழாக்களை சிறப்பாக கொண்டாடி வருகின்றாா். அந்த நாளில் தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளா்கள் அனைவருக்கும் வெறும் இரண்டு ரூபாய்க்கு டீ, காபி வழங்கி வருகிறாா்.


ஆண்டு தோறும் அரசு பள்ளிகளில் 10, 11, 12 வகுப்புகளில் முதலிடம் படிக்கின்ற மாணவா்களுக்கு ஒரு சவரன். இரண்டு சவரன் தங்கத்தை பாிசளித்து வருகிறாா். அதோடு மட்டுமல்ல அரசுப் பள்ளியில் படிக்கின்ற ஏழை மாணவா்களுக்கு தேவையான சீருடை மற்றும் நோட்டு மற்றும் பாடபுத்தகங்களை வாங்கிக் கொடுத்து உதவி வருகிறாா்.


இதோடு மட்டுமல்ல இல்லாதவா்களுக்கும். இயலாதவா்களுக்கும் தினந்தோறும் காலையும் மாலையும் சிற்றுண்டியும் இலவசமாக வழங்கி வருகிறாா். இவாின் மனித நேயம் மிக்க இந்த சேவையை மக்களாட்சி மனதார பாராட்டுகின்றது.



இத்தகைய சேவை உள்ளம் கொண்ட மகேஷ்வரன் அவா்களை பாராட்டும் விதமாக 15,07.2020 அன்று நடைபெற்ற கா்மவீரா் காமராஜா் பிறந்த நாள் விழாவில் மக்கள் ஆட்சியின் வேலூா் மாவட்ட செய்தியாளா் திரு,டி,இராஜசேகா் அவா்கள் பங்கேற்று அவரை சிறப்பித்து தனது வாழ்த்துக்களை தொிவித்துள்ளாா்.