தமிழக அரசியல் களத்தில் ஆட்டத்தை துவங்கியது பிரசாந்த் கிஷோரின் ஐபேக்

தமிழக அரசியல் களத்தில் ஆட்டத்தை துவங்கியது பிரசாந்த் கிஷோரின் ஐபேக்






தமிழக அரசியல் களத்தில் தன் சகுனி வேலையை துவங்கியுள்ளது பிரசாந்த் கிஷோரின் I-PAC (Indian Political Action Committee) நிறுவனம்.

 

380 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்காக பல முனைகளில் காய் நகர்த்துகிறது பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம். இதற்காக மாதம் 25,000 ரூபாய் சம்பளத்தில் பல தமிழக இளைஞர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. 

    

மகாபாரதத்தில் துரியோதனனை மன்னனாக்க, மாமா சகுனி செய்த அனைத்தையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு பல வியூகங்களை வகுக்கிறது ஐபேக் நிறுவனம் என்கிறார் அரசியல் விமர்சகர் கிருஷ்ண குமார்.

 


முதற்கட்டமாக திமுக வெற்றிபெறும் வாய்ப்புள்ளதாக 145 சட்டசபைத் தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.  ஒவ்வொரு தொகுதியிலும் அரசியல் சார்பில்லாத ஆனால் தொகுதிக்கு நன்கு அறிமுகமான 500 பிரபலங்களை குறிவைக்கிறது இந்த  i-PAC. 

 

தொகுதியில் பிரபலமான டாக்டர்கள், இன்ஜினியர்கள், வக்கீல்கள், கோவில் தர்மகர்த்தாக்கள், சமூக சேவகர்கள் என்று பலரை கண்டறியும் வேலையைத் துவங்கியுள்ளது. மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போதும் மற்றும் கொரோனா ஊரடங்கின் போதும் உதவி செய்தவர்கள் யார் யார் என்ற பட்டியலையும் தயார் செய்கிறது.

 

இந்த மாதம் முதல் ஐபேக் சார்பாக சில இளைஞர்கள் இந்த பிரபலங்களை நேரில் சந்தித்து அரசியல் சார்பில்லாமல் உரையாடுவார்கள்.  

 


முதல் சந்திப்பிலேயே இந்தப் பிரமுகர்களுக்கு 5000 ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை வழங்கி அசத்தப்போகிறோம் என்று இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு இளைஞர் கூறுகிறார்.   பின்னர் வரும் சந்திப்புகளில் திமுக கட்சித்தலைவர்கள் இந்த பிரபலங்களை நேரில் சந்தித்து பேச உள்ளார்கள்.  இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு தொகுதிக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வாக்குகள் வரை பெற முடியும் என்று திட்டம் போடுகிறார் பிரசாந்த் கிஷோர்.

 

மகாபாரதத்தில் ஒரு காட்சி. பாண்டவர்களுக்கு உதவுவதற்காக நகுல சகாதேவனின் மாமா சல்லியன் ஒரு லட்சம் படை வீரர்களுடன் வருகிறார். சகுனியின் சூழ்ச்சியின்படி நடந்த துரியோதனன், தனது வேலைக்காரர்களை அனுப்பி சல்லியன் படைகளுக்கு பலத்த உபச்சாரம் செய்கிறான்.  உபசாரத்தில் மயங்கிய சல்லியன் கடைசியில் துரியோதனன் கட்சியில் இணைந்து பாண்டவர்களை எதிர்த்து சண்டை இடுகிறார். சகுனியின் இதே திட்டத்தை ரீபேக் செய்கிறது ஐபேக்.

 

திமுக வெற்றிக்காக ஐபேக் செய்யும் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் இன்று வைரலானா்து. இதோ ⬇️

 


"எவ்வளவு சூழ்ச்சிகள் செய்தாலும்;  எவ்வளவோ பிரச்சனைகளை கிளப்பினாலும் ஐபேக் நிறுவனத்தினால் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்ய முடியவில்லை" என்கிறார் அரசியல் விமர்சகர் அண்ணாமலை. அதேப்போன்று இன்னொரு தோல்வியை சந்திக்க மயாராகிக் கொண்டுள்ளாா் பிரசாந்த் கிஷோா்.

 

= பத்மநாபன் நாகராஜன்