சீன செயலிகள் மூலம் இவ்வளவு வருமானமா...? நம்மள வெச்சி இவ்வளவு சம்பாதிச்சி இருக்காங்களா?
இந்திய நாட்டு எல்லைகளைக் காக்கும் காவல் சாமிகள் நம் ராணுவ வீரர்கள். இந்திய ராணுவ வீரர்களை, சீனர்கள் தாக்கி, உயிரிழக்கச் செய்த செயல் நம்மில் பலரையும் கோபத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றது.
இதற்காக சீன பொருட்களை புறக்கணிப்பது என்கிற கருத்து பரவலாக பேசப்பட்டது. இன்னொரு பக்கம் டேட்டாக்களை பாதுகாப்பை காரணம் காட்டி, மத்திய அரசு தன் பங்குக்கு சமீபத்தில் 59 சீன அப்ளிகேஷன்களை ( செயலிகளை) தடை செய்து இருக்கிறது.
டிக் டாக், யூ சி ப்ரவுசர், யூ சி நியூஸ், ஷேர் இட், கேம் ஸ்கேனர் போன்ற முக்கியமான செயலிகள் இந்த தடை செய்யப்பட்ட அப்ளிகேஷன்கள் பட்டியலில் அடக்கம்.
இப்போது மேலே சொன்ன அப்ளிகேஷன்கள் எல்லாம், நம்மை (இந்தியர்களை) வைத்து எவ்வளவு சம்பாதித்து இருக்கிறார்கள் என ஒரு செய்தி, ஒரு முன்னணி வலை தளத்தில் வெளியாகி இருக்கிறது.
Bytedance (India) என்கிற பெரிய நிறுவனத்தின் கீழ் செயல்படும் செயலி இது. இந்த செயலிக்கு அதிக அறிமுகம் தேவை இல்லை. இந்தியாவில் சுமாராக 61.1 கோடி டவுன்லோட்கள் செய்யப்பட்டு இருக்கிறதாம். டிக் டாக்-க்கு இந்தியா தான் மிகப் பெரிய சந்தை. கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் ஒட்டு மொத்தமாக Bytedance (India) கம்பெனி, 43 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி இருக்கிறார்கள் என்கிறது சென்சார் டவர்
இந்த Bytedance என்கிற கம்பெனியின் கீழ் தான், இந்தியாவில் டிக் டாக், ஹலோ என 5 கம்பெனிகள் இருக்கிறதாம். இந்த Bytedance கம்பெனி, கேமன் தீவுகளில் பதிவு செய்து இருக்கிறார்களாம். இந்தியாவில் பைட் டான்ஸ் கம்பெனி சுமாராக 1,000 பேருக்கு வேலை கொடுத்துக் கொண்டு இருக்கிறதாம்.
அலி பாபா குழுமத்துக்குச் சொந்தமான செயலிகள். யூ சி வெப் மொபைல் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளின் கீழ் 13 கோடி ஆக்டிவ் யூசர்கள் இருக்கிறார்களாம். இந்தியாவில் கூகுள் குரோமுக்கு அடுத்து, அதிகம் பேர் பயன்படுத்தும் ப்ரவுசர் யூ சி ப்ரவுசர் தானாம். யூ சி வெப் மொபைல் கம்பெனி இந்தியாவில் சுமாராக 100 பேருக்கு வேலை கொடுத்துக் கொண்டு இருக்கிறது. 2018 - 19-ல் 226 கோடி ரூபாயை வருவாயாக சம்பாதித்து இருக்கிறதாம்.
உலகிலேயே அதிகமாக பயன்படுத்தப்படும் ஸ்கேனிங் அப்ளிகேஷன் என்றால் அது கேம் ஸ்கேனர் தானாம். இந்த செயலியை இந்தியாவில் சுமாராக 10 கோடி பேர் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களாம். இவர்களும் கணிசமாக நம்மை வைத்து வருவாய் சம்பாதித்து இருப்பார்கள். ஆக சீனர்கள், நம்மை வைத்து செமயாக கல்லா கட்டி இருக்கிறார்கள்.
இந்தியாவில் வெறுமனே சீன செயலிகளை மட்டும் புறக்கணிப்பதால் ஒன்றும் வேலைக்கு ஆகாது. ஆனால், உண்மையாகவே, சீன புறக்கணிப்பைக் முழுமையாக கொண்டு வர வேண்டும் என்றால், டிஜிட்டல் இந்தியா திட்டத்தையும், மேக் இன் இந்தியா திட்டத்தையும் அதி விரைவாகவும், அதிகமாகவும் செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு தொடர்ந்து இதில் கவனம் செலுத்தும் என நம்புவோம்.
இந்தியாவில் தயாாிப்போம் இந்தியப் பொருட்களை மட்டுமே உபயோகிப்போம் என்று வாய் கிழிய பேசினால் மட்டும் போதாது. அதை செயலிலும் காட்ட வேண்டும். அப்போது தான் நாம் பொருளாதாரத்தில் வளர முடியும். கலாம் கண்ட கனவை நனவாக்க முடியும்.