இலவச சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு!!

இலவச சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு!!




மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்,, டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறியது:

 

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் மேலும் மூன்று மாதங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்க மத்திய அமைச்சரவை ஒபபுதல் அளித்துள்ளது.

அதாவது ஏற்கெனவே ஜூன் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக மத்திய அரசுக்கு 13, 500 கோடி ரூபாய் செலவாகும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக ஒரு லட்சம் வாடகை வீடுகள் கட்டித் தரவும் அமைச்சரவை ஒ்ப்புதல் அளித்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தா தொகையையும் (இபிஎஃப்) மேலும் மூன்று மாதங்களுக்கு மத்திய அரசே செலுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் நிறுவனங்களின் பங்களிப்பான 12%, பணியாளர்கள் பங்களிப்பான 12% என 24% அடங்கும்.


 



ஜூன் மாதம் முதல் ஆகஸட் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கு இபிஎஃப் தொகையை மத்திய அரசே செலுத்துவதால், மொத்தம் 4,860 கோடி ரூபாய் செலவாகும். இதன் மூலம், நாடு முழுவதும் 72 லட்சம் பணியாள்ரகள் பயன் பெறுவார்கள்.
நாடு முழுவதும் இவவச ரேஷன் வழங்கும் திட்டத்தை மேலும் 5 மாதங்களுக்கு, அதாவகு நவம்பர் மாதம் வரை நீட்டிக்கவும் அமைச்சரவை ஒப்புதல அளித்துள்ளது என்று அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.