அப்துல் கலாமின் நண்பர் கொரோனாவால் மரணம்!
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் நண்பர் போஜா கவுடர் கொரோனாவால் உயிரிழந்தார்.
ஊட்டி அருகே கடநாடு கிராமத்தை சேர்ந்தவர் போஜா கவுடர் (90). இவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, ஜூலை 13ம் தேதி ஊட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதியானதால், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். உயிரிழந்த போஜா கவுடர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கல்லுாரி நண்பர் ஆவார்.
அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது, 2006-ல் ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அப்போது, போஜா கவுடரை மேடைக்கு அழைத்து, கல்லுாரி நினைவுகளை கூறி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.