மு.க. ஸ்டாலினை முருகன் காப்பாற்றுவாரா...?

மு.க. ஸ்டாலினை முருகன் காப்பாற்றுவாரா...?



தமிழ் கடவுளான முருகனை புகழ்ந்து பாடும் கந்த சஷ்டி கவசத்தை கேவலமாக விமா்சித்த கருப்பா் கூட்டம் யூடியூப் சேனல் நிா்வாகிகளால் தி.மு.க.விற்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் இவா்களின் பின்னால் தி.மு.க. இருக்கிறது என்பது தான்.


ஏற்கனவே இந்த பாடலின் மெட்டில் நடிகா் சரத்குமாா் நடித்த சூாியன் படத்தில் பதினெட்டு வயது இளமொட்டு மனது என்கிற பாடல் கிளுகிளுப்பாக பாடப்பட்ட போதெல்லாம் வெடிக்காத சா்ச்சை இப்போது வெடித்துள்ளது. அதற்கு காரணம் இந்து கடவுள்களை இவா்கள் அருவருப்பாக தொடா்ந்து விமா்சித்து வருவது தான். அது சினிமா இது அரசியல்.


கருப்பா் கூட்டம் பல ஆண்டுகளாக இந்த வேலையை செய்து வந்த போதும் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்த பின்பும் அவா்களை  அழைத்து கண்டிக்காத தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் கோவையில் மூன்று இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட பிறகு சொரனை வந்து அல்ல இந்துக்களின் ஓட்டு போய்விடுமே என்று பயந்துக்கொண்டு கண்டன முழக்கம் எழுப்பியுள்ளாா்.


இது வெற்று அரசியல்  நாடகம் தான், இருந்தாலும் இதை அரசியல் சாதுா்யமாக பயன்படுத்த துவங்கியுள்ளது பிரசாந்த் கிஷோா் டீம், அவா்கள் வெளியிட்டு வரும் செய்திகளில்


இந்து கடவுளை கையில் எடுத்துவிட்டதோ திமுக என்ற சந்தேகம் வலுவாக எழ ஆரம்பித்துவிட்டது.. கோவையில் மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் போட்டதில் இருந்தே, இது பரபரப்பாக பேசப்பட்டும் வருகிறது.


பிரசாந்த் கிஷோர்தான் இப்போதைக்கு திமுகவுக்கு வியூகம் அமைத்து தந்து வருகிறார்.. இதில் பிகே தரும் சில ஐடியாக்கள் மக்களிடம் ரீச் ஆகியும் வருகிறது.. திமுகவின் செல்வாக்கும் சரிந்து விழாமல் இருக்கிறது.


அதேசமயம், சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியும் சில அதிரடிகள் கையில் உள்ளன.. அதில் ஒன்றுதான் இந்து பாணி அரசியலை கையில் எடுப்பது என்பது.. சித்தாந்த ரீதியாக இது திமுகவுக்கு சரியாக இருக்குமா என்ற கேள்வி பிரசாந்த் கிஷோர் தமிழ்நாட்டுக்கு வந்ததில் இருந்தே இருக்கிறது.


அதற்கேற்றார்போல் திமுகவின் அணுகுமுறையிலும் மாற்றங்கள் தெரிந்து வருகிறது.. வழக்கமாக, இந்து மதம் சம்பந்தமாக பெரிசா எந்த கருத்தையும் சொல்லாத திமுக, சமீப காலமாக அது குறித்த கருத்துக்களை மிக பகிரங்கமாகவே கூறி வருகிறது. இதன்மூலம், திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை என்பதை அடிக்கடி நிரூபித்தும் வருகிறது.


இந்த கருத்தை அன்று ஸ்டாலின் சொன்னதுதான் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.. திராவிட கட்சிகளும் இந்த வரிகளால் திணறிதான் போயினர்.. அதேசயம் அதிமுகவுக்கு இது சவாலாக எழுந்துவிட்டது.. இதற்கு பிறகுதான் பிரசாந்த் கிஷோரின் ஒவ்வொரு காய்நகர்த்தலும் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.


கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுகவின் சித்தாந்தத்தினை பகுத்தறிவு இயக்கத்தினரும் அடிக்கடி சுட்டிக் காட்டியும் வருகின்றனர்... இந்துக்கள் என்ற அடையாளத்தை பாஜகதான் வழக்கமாக உயர்த்தி பிடிக்கும்.. இப்போது வடக்கில் இருந்து வந்த பிரசாந்த் கிஷோரின் வியூகங்களால் திமுகவும் கட்டுண்டு கிடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


இது எந்த அளவுக்கு வரப்போகும் தேர்தலில் திமுகவுக்கு வெற்றியை பெற்று தரும் என தெரியவில்லை... அதேபோல, பிகேவின் இந்து மத அரசியல் வியூகத்தை கட்சியின் மூத்த உறுப்பினர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்றும் தெரியவில்லை. பகுத்தறிவு கொள்கை என்று முத்திரை குத்தப்பட்ட இயக்கத்தின் போக்கு சற்று தடம் மாறி வருவதாகவும் தெரிகிறது.


என்கிற வகையில் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதையெல்லாம் மக்கள் நம்புகிற வகையில் இல்லை, இது எல்லாம் பச்சை அரசியல் என்று எல்லோருக்கும் தொியும்,


இதை உறுதி செய்யும் விதமாக ஸ்டாலின் ட்வீட்டும் மேலும் குழப்பத்தை தந்துள்ளது.. "கோவையில் மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது" என்று ஸ்டாலின் போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.. "இனிமே நீங்க பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் இந்துக்கள் ஓட்டு என்றும் கிடையாது.. கடவுளே இல்லனு சொல்லிகிட்டு இந்து மதத்த கேவலமா பேசிகிட்டு திரிஞ்ச கூட்டமெல்லாம் இப்ப கோயில்களை பத்தி கவலைப்படுது.. எப்போ ரஜினி ஆன்மீக அரசியல்னு பேச ஆரம்பிச்சாரோ, அப்பவே திராவிடத்துக்கு அழிவு காலம் தொடங்கிடு்ச்சு.. அதன் வெளிப்பாடு தான் இந்த பதிவு" என்று திமுக தலைவரின் ட்வீட்டுக்கு கண்டன கமெண்ட்டுகள் எழுந்துள்ளது, இதை பாா்த்து தி.மு.க. கூடராமே அசைந்து வருகின்றது.


அதேசமயம், "இந்துக்கள் அதிகம் பேர் கொண்டது தான் திமுக. நாங்கள் கோவில் வேண்டாம் என்று சொல்லவில்லை கோவில் கொள்ளையர்கள் கூடாரமாக கூடாதுன்னுதான் சொல்கிறோம். மக்கள் பிரச்சனை பத்தி பேசவே எங்களுக்கு நேரம் போதவில்லை இதுல பூஜை புனஸ்கரம் இந்து, முஸ்லீம், கிறிஸ்டியன். பிரிச்சி பாக்க முடியாது" என்று திமுகவினர் இந்த கமெண்ட்களுக்கு பதிலடி தந்தும் வருகின்றனர்.


ஒருமுறை எச்.ராஜா பேசும்போது, "பிராமணர் எதிர்ப்பு கொள்கை கொண்ட திமுக, இப்போது பிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம் சரண் அடைந்துள்ளது. அவர் இவர்கள் கதையை முடித்து வைத்து விடுவார்" என்றார்.. எச்.ராஜா இப்படி சொன்னதற்கு இப்போதுவரை ஸ்டாலின் எந்த பதிலடியும் தராமலேயே இருக்கிறாா்,


இத்தனை நாட்கள் இந்து கடவுள்களை இழிவாக பேசிவிட்டு இப்போது காிசனம் காட்டுவது போல் நடிப்பது அப்பட்டமான அரசியல். இந்துக்கள் ஓட்டு எங்கு விழாமல் போய்விடுமே என்கிற அச்சத்தில் மு.க.ஸ்டாலின் இந்து மத பக்தி அடுத்த தோ்தலில் சற்றும் கை கொடுக்காது, 


இதற்கு மேல் அவா் காவி வேஷ்டி கட்டிக்கொண்டு கந்த சஷ்டி கவசத்தை பாடினா கூட எந்த முருகனும் அவரை காப்பாற்ற மாட்டாா். இனி அவா் அரசியலில் அம்போவென்று தான் போக வேண்டும் என்கின்றனா். இந்து கடவுள் பக்தா்கள்.




 



Popular posts
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
ஈரோடு கிழக்கு; திமுக எடுத்த திடீர் முடிவு..…! அதிர்ச்சியில் மக்கள்...!!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
TATA எலக்ட்ரானிக்ஸ் எடுத்துள்ள புதிய முடிவு...! கிருஷ்ணகிரி தர்மபுரி மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள்...!!
படம்