தென் பெண்ணை நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை.. கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடரும் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு வரும் நீரின் அளவு 405 கன அடியாக அதிகரித்துள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் நீர்வரத்து வினாடிக்கு நேற்று 360 கனஅடியாக இருந்த நிலையில் இன்று 405 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 29.40 அடியாக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, அணையின் வலது மற்றும் இடதுபுற பாசன கால்வாய் மூலம் அணைக்கு வரும் நீரில் 148 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி 52 அடியான அணையின் உயரத்தில் 29.40 அடி நீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 405 கன அடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து 148 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.