பல்வேறு கட்சியிலிருந்து விலகி 360 போ் இந்திய கம்யூனிஸ்ட்டில் இணைந்தனா்



பல்வேறு கட்சியிலிருந்து விலகி 360 போ் இந்திய கம்யூனிஸ்ட்டில் இணைந்தனா்



கிருஷ்ணகிரி மாவட்டம்,ஒசூா் அருகே அஞ்செட்டி அடுத்த தேவகாணதொட்டி மற்றும் சம்பகேமரத்தொட்டி ஆகிய கிராமங்களில் உள்ள இளைஞா் மற்றும் பொது மக்கள் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி விஜயகுமார் தலைமையில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 360 போ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்.இந்த விழாவுக்கு தளி முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ராமச்சந்திரன் தலைமை வகித்துப் பேசினார்.


இதில் சிறப்பு விருந்தினராக தொழிலதிபா் வரதராஜன் கலந்து கொண்டார். விழாவில் விவசாய அணி மாநில துணைத் தலைவா் லகுமையா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் பழனி, பூதட்டியப்பா, குமார், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் கேசவமூா்த்தி, ஊராட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் சௌந்தரவள்ளி, பிரசாந்த் கவுடா, நாகராஜ், ஒன்றியச் செயலாளா் ஜெயராம, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.