முதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை..! 

முதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை..! 




தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மேலும் 2,710 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடக்கம்.

 

இன்றைய பாதிப்பு எண்ணிக்கையுடன் சேர்த்து தமிழகத்தில் இன்றோடு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,087 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் 1,487 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பானது 42,752 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் 37 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இன்று அதிகபட்சமாக 1,358 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34,112 பேர் குணமாகியுள்ளனர்.

 

தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்படும் 27178 பேர் உள்ளனர். தமிழகத்தில் தீவிரமாகியுள்ள கொரோனா பாதிப்பு நாள்தோறும் ஒரே கோட்டில் நிலைத்து வருகிறது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்கள் வேகமாக குணமாகி வருகின்றனர். தினமும் டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உள்ளது.

 

இதுகுறித்து விளக்கமளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த நிலவரத்தை எவ்வித ஒளிவு மறைவுமின்றி அறிவிக்கப்பட்டு வருகிறது. முதல்வருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என்று வந்துள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.