தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முழு ஊரடங்கு
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி பகுதியில் தற்போது கொரானா வைரஸ் பாதிப்பு 33 நபர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்று நோய் வேகமாக பரவி வருவதால் நோய் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் பொருட்டு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுரைப்படி பெரியகுளம் நகராட்சி பகுதியில் ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு உத்தரவு இது தொடரும் என்று பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் அறிவித்து உள்ளனர்.
எனவே பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் மளிகை காய்கறி, பழங்கள், இறைச்சி கடைகள் மற்றும் உணவகங்கள் ஹோட்டல் பேக்கரி டீ ஸ்டால் ஜவுளிக்கடை செருப்பு கடை அழகு நிலையம் சலூன் கடை எலக்ட்ரானிக் பொருள் விற்பனை நிலையங்கள் அரசு மற்றும் தனியார் வங்கி பொது நிறுவனங்கள் அனைத்து விதவிதமான கடைகள் வணிக நிறுவனங்கள் அனைத்தும் மறு உத்தரவு வரும்வரை திறக்கக்கூடாது என்று நகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளனர்.
அத்தியாச பொருட்கள் தேவைக்கு வீடுதோறும் சென்று விற்பனை செய்யும் முறையில் டோர் டெலிவரி முறையை அமல்படுத்தபடுகிறது.
பொதுமக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளனர்..
பொதுமக்களின் உதவிக்காக தன்னார்வலர்களின் அனைத்து வார்டில் பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்படும் என்பதையும் தெரிவித்து உள்ளனர்.
எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளனர்
இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளில் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.
தேனி மாவட்ட செய்திக்காக அ வெள்ளைச்சாமி