டிசம்பா் 26ல் தொடங்கிய கொரோனா ஜீன் 26ல் முடியப்போகிறதா....? ஆச்சாிய தகவல் உண்மையாகுமா...?
கொரோனாவுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த சூரிய கிரகணத்திற்கும் தொடர்பு உள்ளதாக கூறி, சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் சுந்தர் கிருஷ்ணன். அணு மற்றும் புவியியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானி. இவர் சமீபத்தில் ஏஎன்ஐக்கு அளித்த பேட்டி ஒன்றில், கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய சூரிய கிரகணத்தின் போது வெளியான ஆற்றல் காரணமாகப் அணுவில் பிளவு ஏற்பட்டு பரிணாம வளர்ச்சியில் கோவிட்-19 உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் 2019ஆம் டிசம்பரில் தோன்றி, மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது. இதற்கிடையே நான் மேற்கொண்ட ஆய்வுகளில் கடந்த டிசம்பர் 26 அன்று தோன்றிய சூரிய கிரகணத்திற்குப் பிறகு நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்கள் தன்னை மறு சீரமைத்துக் கொண்டுள்ளது தெரியவந்தது.
அந்த கிரகணத்தின்போது வெளியான ஆற்றல் காரணமாக ஏற்பட்ட சேர்க்கைகள், அணுக்களின் பிளவு காரணமாக குறிப்பிட்ட நியூக்ளியஸ் உருவாக்கம் தொடங்கியிருக்கலாம். இப்படி வளிமண்டலத்தில் ஏற்பட்ட அணுசக்தி தொடர்பு, உயிரியக்கத்தின் கருவாக அமைந்திருக்கலாம். இதன் மூலம் கொரோனா வைரசின் உயிர் மூலக்கூறு கட்டமைப்பின் பிறழ்வு நடந்திருக்க வாய்ப்புள்ளது. என்று அவர் கூறினார்.
இந்த வகை வைரஸ்கள் சீனாவில்தான் தோன்றியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் தனது பேட்டியின்போது கிருஷ்ணா குறிப்பிட்டிருந்தார்.