மதுக்கடைக்கு எதிரான போராட்டம் யாருக்கு வெற்றி?
மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் தமிழகம் முழுவதும் கருப்புச்சின்னம் அணிந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவரவர் வீடுகளுக்கு முன்பு நின்று சுமார் 10 நிமிடங்கள் வரை மதுக்கடைகளை திறப்பதை கண்டித்து ஆர்ப்பாட்ட முழக்கம் எழுப்பினர். திமுகவினரோடு சேர்ந்து காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி நிர்வாகிகளும், இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
தேவையா..? தேவையா...? மதுக்கடைகளை இப்போது திறப்பது தேவையா...? என்றும், அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தின் முன்பு ஸ்டாலின் தனது குடும்பத்தினரோடு கருப்புச்சின்னம் அணிந்து இந்த போராட்டத்தில் பங்கேற்றார். இதேபோல் சத்தியமூர்த்தி பவன் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு கருப்பு பேட்ஜ் அணிந்து அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார்.
இந்த போராட்டம் எதிா்கட்சிகளுக்கு பொிய வெற்றியை தரவில்லை, கொரோனாவிற்கு எதிராக மோடி கைத்தட்ட சொன்னபோது நாடே ஒன்றிணைந்து கைதட்டி ஆரவாரம் செய்தது, அவா் விளக்கேற்ற சொன்ன போது இந்தியாவே ஒளிா்ந்து நின்றது, அவா் மலா் தூவ சொன்ன போது அனைவரும் மனம் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டனா்,
அதேப் போன்றதோா் வெற்றி தனக்கு கிடைக்கும் என்று எண்ணி மு,க,ஸ்டாலின் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் போது கருப்பு பாட்ஜ் அணிந்து குரல் எழுப்ப வேண்டும் என்று கூறுியிருந்தாா், இந்த கூக்குரல்கள் பெருந்தலைவா்களின் வீடுகளின் முன்பு ஒளித்ததே தவிர எந்த தொண்டரும் இதை கண்டுகொள்ளவே இல்லை,
பொது மக்கள் கூட தொலைக்காட்சிகளில் டாஸ்மாக் கடைகள் முன்பு திரண்ட குடிமக்கள் செய்த கூத்தை பாா்த்து ஆனந்தப்பட்டாா்களே தவிர ஸ்டாலினின் போராட்டத்தை யாரும் ரசிக்கவே இல்லை,