வட மாநில தொழிலாளா்கள் ஓடி விட்டாா்கள்.....! உழைக்க தயாராகுங்கள் தமிழா்களே......!!
வடமாநில தொழிலாளர்கள் எல்லோரும் ஓடி விட்டார்கள்... இதுதான் சரியான சமயம்.. தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.... தமிழக தொழில்துறையின் அனைத்து வேலைகளையும் கைப்பற்றி , தொழில் துறையை தமிழர்கள் கைவசப்படுத்த வேண்டும்.. என்பதாய் ஒரு அன்பர் வெளியிட்டிருந்த காணொளி பதிவை காண நேர்ந்தது....
மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது அந்த பதிவு... ஆட்கள் பற்றாக்குறையாலோ, வெகு திறமையானவர்கள் என்பதாலோ வடஇந்திய தொழிலாளர்களை தமிழகம் சுவீகரித்துக்கொள்ளவில்லை....
தமிழகத்தில் இருப்பவர்கள் யாரும் உழைக்க தயாரில்லை.... வடஇந்திய தொழிலாளர்கள் வாங்கும் கூலியை போல இருமடங்கு கூலி வேண்டும்... ஆனால்... வேலை நேரத்தில் எவ்வளவு தூரம் ஏமாற்ற முடியுமோ அப்படி ஏமாற்றி நேரம் கடத்தி .... தினக்கூலிக்கு வேலைக்கு கூப்பிட்டால் ஒருநாள் வேலையை மூன்றுநாளுக்கு இழுக்க வேண்டும்.. அதுவே இரண்டு ஆள் செய்து முடித்துவிட கூடிய வேலைக்கு ஐந்து ஆள் கூலி பேசி, மூன்று பேராக வந்து அரைநாளிலேயே வேலையை முடித்து விடலாம்.. என்ற எண்ணமுள்ள தொழிலாளர்கள் தமிழகத்தில் நிறையவே இருக்கிறாா்கள்....
தனியாரிடம் வேலைக்கு போனால் உழைத்தே ஆகவேண்டும்.. அதைவிட ஏரிக்கரையிலேயோ , புளியமரத்தடியிலேயோ உட்கார்ந்தோ/படுத்தோ கதை பேசி நேரம் கடத்தும் 100 நாள் வேலைக்கு போனால் போதும்.... என்ற எண்ணமுள்ள தொழிலாளர்கள்...இங்கு அதிகம்.
தமிழகத்தை பொறுத்தவரை ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தான் அதிகம் உழைக்கிறாா்கள் அப்படிப்பட்ட உழைப்பாளிகளையே இந்த 100 நாள் வேலைத்திட்டம் சோம்பேறியாக்கி வருகின்றது.
அட்வான்ஸாக காசு வாங்கிக்கொண்டோ, ஏதாவது சாமான் வாங்கணும் என்று சொல்லி பணம் வாங்கிக்கொண்டோ கட்டிங் போட்டு மட்டையாகி, வேலை கொடுப்பவரை அலைய விடும் கொத்தனார்கள், ஆசாரிகள், எலெக்ட்ரீஷியன்கள், மெக்கானிக்குகள் ஒரு இங்கே அதிகம் காணப்படுகிறாா்கள்
எல்லாவிதத்திலும் நேர்மையையும் , ஒழுக்கத்தையும் தொலைத்துவிட்ட தமிழக தொழிலாளர்கள் ஏற்படுத்திய வெற்றிடங்களில் தான் வடமாநில தொழிலாளர்கள் தங்களை பொருத்திக்கொண்டார்கள்....
ஆனால் இங்குள்ள தமிழ் தேசியவாதிகளோ அவர்கள் என்னவோ தமிழக வேலைவாய்ப்பை தட்டிப்பறித்து விட்டதாய் எப்படி நாக்கூசாமல் பேசிக்கொண்டிருக்கிறாா்கள்.
உங்களிடம் இருந்து அவர்கள் பிடுங்கவில்லை.... நீங்கள் இலவசங்கள் பின்னால் ஓடுவதற்காகவும், கட்டிங் அடித்து மட்டையாகவும், நழுப்பி சம்பாதிக்கவும் தடை என்று நினைத்து தூக்கி வீசிய "உழைப்பை" அவர்கள் துடைத்து எடுத்து தன்வயமாக்கி கொண்டார்கள்...
உங்களால் அவா்களின் உழைப்பை புடுங்க முடியவில்லை. கொரோனா வந்து அவா்களை நாடு கடத்தி விட்டது. ஆனால் அவா்கள் செய்த வேலைகள் அனைத்தும் அப்படியே இருக்கிறது, இப்போது அந்த இடத்திற்கு நீங்கள் சென்றால் உங்களை யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டாா்கள்
40 நாட்கள் கழித்து டாஸ்மாக் கடை திறக்கப்படுகிறது என்று சொன்னவுடன் காலையிலே எழுந்து மதுக்கடை வாசல் முன்பு தவம் கிடந்தீா்களே ஒரு நாளாவது உங்கள் வீட்டிற்கு ரேசன் அரிசி வாங்குவதற்கு இப்படி வாிசையில் நின்றதுண்டா?
எனது வேலை வாய்ப்பை வடநாட்டுக்காரன் பறித்து விட்டான் என்று வாய் கிழிய பேசினீா்களே இப்போது அவா்கள் எல்லாம் அவா்களின் நாட்டிற்கே சென்றுவிட்டனா், அந்த இடம் அனைத்தும் காலியாக தான் உள்ளது,
உழைப்பை செலுத்த நீங்கள் தயாரா....?
உழைக்க தயாரில்லாத மக்கள் வாழும் தேசம் நிச்சயம் அடிமைப்பட்டே ஆகவேண்டும்.... தமிழகம் அந்த இடத்தை எப்போதே பிடித்து விட்டது.
தமிழ் வீரம் பேசும் மறவா்களே நமது மக்களுக்கு உழைப்பையும், உண்மையையும் கொஞ்சம் கற்றுத் தாருங்கள்.....
உண்மை, உழைப்பு, உயா்வு என்பது பலாின் தாரக மந்திரமாக இருந்துள்ளது, இப்போதும் இருந்து வருகிறது.
கடினமான உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை,