சனிக்கிழமை தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மே 16ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குவார்.
இந்த கொரோனா காலகட்டத்தில் தி.மு.கவின் செயல்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுமென்றும் இந்தக் கூட்டம் காணொளிக் காட்சி மூலமாக நடக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது