அதிமுக தொண்டருக்கு உதவிய திமுக நிர்வாகிகள்.....
பெரியகுளம் நகரச் செயலாளர் SB முரளி தலைமையில் திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள் உத்தரவுப்படி ஒன்றினைவோம் திட்டத்தில் அனைத்து மக்களுக்கும் கொரானோ வைரஸ் தடுப்பு கால நிவாரணப் பொருள்கள் வழங்கி வருகின்றனர். இந்த திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் பாராட்டியதால் மேலும் திமுகவினர் உத்வேகத்துடன் நிவாரணப் பொருள்கள் வழங்குகின்றனர். அதன்படி இன்று தென்கரை பகுதியில் கூலித் தொழிலாளிகளுக்கு உணவு வழங்கினார்கள். இதில் கட்சி வேறுபாடு இல்லாமல் அதிமுக தொண்டருக்கும் உணவுப் பொருள்களை வழங்கியது அனைத்து மக்களையும் கவர்ந்தது
இந்த நிகழ்ச்சியின் போது .நகர துணைச் செயலாளர் அப்பாஸ் கான். மற்றும் தாமோதரன் உட்பட நகரதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
தேனி மாவட்ட செய்திக்காக அ வெள்ளைச்சாமி 9442890100