ஊரடங்கை தளர்த்தினால் கொரோனாவின் 2வது உச்சநிலை – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!
கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தினால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே 2வது உச்ச நிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது உள்ளது.
உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும் 3.40 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். ஆனால் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், முற்றிலும் ஒழிந்து விடும் என ஊகிக்க வேண்டாம் என உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை பிரிவு தலைவர் மைக் ரேயான் தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடியாத நிலையில், அதன் தாக்கம் மீண்டும் அதிகரிக்காமல் இருக்க கவனமுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளார்.
ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால் தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே 2வது உச்ச நிலையை ஏற்படுத்தும் என அனைத்து நாடுகளையும் எச்சரித்து உள்ளார். இதனால் கொரோனா பாதிப்பு குறைந்த நாடுகளில் அறிவிக்கப்பட உள்ள ஊரடங்கு தளர்வுகளில் மாற்றங்கள் வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.